பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 65 பார்களாயின், கட்டாயம் அந்த ஊர் இரண்டுபடும் என்று பேசிக்கொள்வார்கள். அந்தோ மக்கள் சமுதாயத்தை வாழ வைக்க வந்த அந்தக் கோயில்கள் காரணமாக இப்படிச் சமுதாயங்களே பிளவுபடுவானேன்? அந்தக் கோயிலுக்கு உள்ள நிலபுலன்கள்தாம் காரணம். இந்த நிலையில் என் பாட்டன்மார் கோயிலுக்கு அதிகமாக நிலங்களைத் தானம் செய்துள்ளமையின் அவர்களையும் மனமாரச் சபித்தேன். வேறு என்ன செய்யமுடியும்? இப்படி நன்மை செய்வதை விடுத்துத் தீமையை விரும்பினால் பிஞ்சுள்ளம் நையாது என்ன செய்பும்? கோயில் தூய்மையான இடம். அங்கே அறச் செயலன்றி வேறு கொடுமைகள் நடைபெறலாகா. சமுதாய வாழ்வின் அடிப்படையே கோயில், அங்கு மக்கள் தீமையை மறந்து அறவழி நின்று ஒழுங்காகச் செயலாற்ற வேண்டும். அவ்வறங்களை மேற்பார்க்கும் பண்புடையவரே அறக்காப் பாளர். ஆனால் வேலியே பயிரை மேய்வதுபோல அவரே இது போன்ற கொடுமைகளைச் செய்தால் அறம் வாழ்வது எங்கே? அறத்தின் வழி மக்கள் சமுதாயம் செழித்துச் சிறப்பது எங்கே? எண்ணிப்பாருங்கள். 9. மிட்டாய்ச் சண்டை என் தாயாரும் பெரியம்மாவும் தனிக்குடித்தனம் செய்ய ஆரம்பித்த பிறகு ஒருவரோடொருவர் நெருங்கிப் பழகுவதில்லை. என் தந்தையார் வீட்டுக்கு வராமல் தனியே இருந்து, எப்போதோ பொருள் வேண்டும்போது வந்து சண்டை இட்டுச் செல்லுவார். என் தாயாரே எல்லா வற்றையும் பொறுப்பாகக் கவனித்து வந்தார்கள். என் ஆ-5