பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஆனந்த முதல் ஆனந்த வரை ஒரு பெரியவர் தம் மகனுக்கு நிரம்பப் பொருள் வருவாய்க்குத் தக்க வழியில் அதிக நிலங்களை வைத்து விட்டுச் சென்றார். எங்கள் ஊரில் அவரே பெரிய பணக் காரர் என்னுமாறு அவர் வாழ்ந்து வந்தார். தந்தை இறக்கும் காலத்தில் அவர் கடன் இல்லாமல் இருந்தார். எனினும் தையலார் மையலிலே தாழ்ந்து விழ நேர்ந்த காரணத்தால் அவர் கடன்காரராக வேண்டி இருந்தது. நிலங்களையும் வீடு முதலியவற்றையும் விற்றார். அந்த நிலத்தில் ஒரு பகுதி நெய்க்குப்பத்தில் இருந்தது. அதை முன்னமே சென்னையில் யாருக்கோ அடைமானமாகப் போட்டிருந்தார். அந்த நிலம் விற்பனையாகப் போகிறது என்று என் அன்னையிடம் வந்து யாரோ சொன்னார்கள். அப்போது அப்பா வீட்டில் இருந்த படியால் எப்படியாவது அதை வாங்கிவிட வேண்டும் என்று முயன்றார். அம்மாவும் அதற்குச் சம்மதித்தார்கள். பாட்டி மட்டும் அதற்கு விரைவில் இடங்கொடுக்கவில்லை. உள்ளது போதாதா? என் இப்படி மேலும் மேலும் நிலத்தை வாங்கு கிறீர்கள்? பயிரிடவோ முடியாது. இந்நிலையில் வாங்கித்தான் என்ன செய்யப் போகிறோம்? வேண்டாம் என்றார்கள். எனினும் அதுபற்றிப் பேச வந்திருந்த பெரியவர் அது நல்ல நிலம் என்றும், எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்றும் சொன்னார். அப்போது அம்மாவிடம் பணம் ஒன்றும் இல்லை. ஆனால் வந்தவர் சொன்ன சொல் உணர்ச்சி, யூட்டியது. நிலம் அடைமானத்தில் உள்ளதென்றும், அந்த அடைமானப் பணத்தை அடுத்த ஆண்டுக் கொடுத்து விடலாம் என்றும், எனவே மேலுள்ள சிறு தொகையும் பத்திரச் செலவும் இருந்தால் போதும் என்றும் சொன்னார் அவர். அம்மாவும் சரிதான்’ என்றார்கள். விலை ரூபாய் நாலாயிரம் என்று முடிவாயிற்று. இரண்டு நாள் கழித்து வெளியூர் சென்றிருந்த நிலக்காரர் வந்ததும் பத்திரம் எழுத வேண்டும் என்று தீர்மானித்தார்கள். மேல் தருவதற்கும்