பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. ஆனந்த முதல் ஆனந்த வரை அன்று முதல் நான் உயர்ந்த ஆடை அணிகளை உடுப் பதை விரும்பவில்லை. இறைவன் திருமுன்பு என் நண்பர் எனக்குக் காட்டிய பாடம் இன்றுவரை மனத்தில் நிலை பெற்றுவிட்டது. கூடியவரையில் எளிய வாழ்வையே மேற் கொள்ள வேண்டும் என நினைத்தேன். என்றாலும் என் தாயார் சொற்படி நடக்கவேண்டி இருந்தமையால் நான் எட்டாவது வகுப்பு வாலாஜாபாத்தில் படிக்கும் வரையில் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நகைகளையும் பட்டாடை களையும் அணிந்து கொண்டேன். பிறகு அன்று தொட்டு இன்றுவரை பட்டாடைகளையும் படாடோப வாழ்வையும் விரும்பாது கூடியவரை எளிய வாழ்விலே வாழ்ந்து வருவதாக எண்ணியே என் நாட்களைக் கழிக்கின்றேன். மக்கள் வாழ்வில் திருப்புமையங்கள் எத்தனையோ உண்டாகின்றன. என் வாழ்வின் திருப்புமையங்களுள் அது ஒன்று என்று அன்றைக்கு என்னால் எண்ண முடியாவிட்டாலும், அறி வறிந்த பிறகு நான் அவ்வாறுதான் எண்ணி அமைந்தேன் என்பது உண்மை. 14. மறைந்த தந்தையார் என் தந்தையாரைப் பற்றி அடிக்கடி மேலே கூறி வந்திருக்கிறே னல்லவா! அவர்கள் நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மறைந்து விட்டார். என் தாயார் உடன் பிறந்தவரை விட்டுத் தனியாக வாழ்ந்த காலத்திலும் கணவர்தம் செயலால் மாறுபட்டே வாழ்ந்து வந்தார்கள். மணவாழ்வில் பெறக்கூடியதாகிய இன்பங்கள் அத்தனையும் என் அன்னையார் பெற்றார்கள் இல்லை. என்றாலும் அவர்கள் தம் ஒரே மகனாகிய நான் வாழ வேண்டும் என்ற நல்ல அன்புளத்தாலே தன் வாழ்வையே