பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் கினைவுகள் 95 தியாகம் செய்தார்கள் என்னலாம். ஆம், பல்வேறு கருத்துக் களால் மாறுபட்டு நின்ற அன்னையும் அத்தனும் இறுதியில் சில ஆண்டுகள் ஒன்றியே வாழ்ந்தார்கள் என்னலாம். அந்த ஒன்றிய வாழ்வு நெடுங்காலம் நீடிக்கா வகையில் இறைவன் என் தந்தையாரை இவ்வுலகில் இருந்தே தன்னிடம் அழைத்துக் கொண்டு விட்டான். நான் அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். சிறியவனாக இருந்தபடியால் பெரும்பாலும் வாலாஜா பாத்திலேயே நான் தங்கிவிடுவேன். வாரத்தில் சனி ஞாயிறு களில்தான் நான் வீட்டுக்கு வருவேன். அங்குள்ள தலைமை ஆசிரியர் வீட்டிலேயே எனக்கு உண்டியும் உறையுளும் ஏற்பாடு செய்து இருந்தது. என்றாலும் என் அன்னை பரிவோடு சில பலகாரங்கள் செய்து அடிக்கடி அப்பா மூலம் கொடுத்தனுப்புவார்கள். இந்த நிலையில் நான் சில மாதங்கள் பெற்றோரை விட்டு நீங்கியே இருந்தேன் என்னலாம். பொங்கல் வந்தது. பொங்கல் என்றால் எங்கள் ஊரில் பெருங் கொண்டாட்டம். ஊரில் அதுபோன்ற விழா அன்று மட்டுமன்று; இன்றும் வேறொன்றும் கிடையாது. வீடெல்லாம் துப்புரவு செய்து, வெள்ளை அடித்து, மாடுகளை அழகு செய்து, பற்பல வகையில் வண்ணங்கள் பூசி ஊரையே அனைவரும் அழகுபடுத்துவார்கள். நானும் பொங்கலுக்காக ஊரிலேயே சில(நாள் தங்கி இருந்தேன். அப்பா அந்த ஆண்டு முயன்று நல்ல வேலை செய்தார்கள். எங்கள் வீட்டில் உழவு இல்லை ஆதலால் மாடுகள் கிடையாது. என்றாலும் பாலும் மோரும் எங்கள் உயிராக நின்றமையின் இரண்டொரு பசுக்கள் இருந்தன. என் தந்தையார் அவற்றை அழகு படுத்தினார். மாட்டுப் பொங்கலன்று காலை அவர் உடம்புக்கு ஏதோ தள்ளவில்லை என்று சொல்லிப் படுத்தார். அன்றைக்கு