பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி #15

வரை எதாவது உணவுண்டு; அதற்கேற்ற உறக்க நேரமுண்டு என்ற அளவிலயே அரவிந்தர் வாழ்க்கை சென்று கொண் டிருந்தது. பிரம்மசாரி எண்ணம் புகுந்தவருக்கோ வேறு எப்படி அமையும் வாழ்க்கை?

அரவிந்தர் ஒரு குதிரை வண்டி வைத்திருந்தார். குதிரை மிக உயரம், ஆனால், நடையிலோ கழுதை வேகம், சாட்டை முறிய மளவுக்கு குதிரையை அடித்தாலும் அதன் வேகம் எருமை மாடு வேகம்தான்்

இத்தகைய குதிரைக்குப் பழங்கால ஓட்டை உடைசலைப் போன்ற ஒரு வண்டி இருந்தது. வண்டி புறப்பட்டால் அதன் வேகம் எப்படி இருக்கும் தெரியுமா?

"முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க பின்னே யிருந்து இரண்டுபேர் தள்ள - எந்நேரமும் வேதம் ஒதும் வாயான விகடராமன் குதிரை

மாதம் போங்காத வழி'

என்ற வீரமாமுனிவர் நகைச்சுவையோடு கூறும் பரமார்த்த குரு குதிரையைப் போல, அரவிந்தர் குதிரை வண்டியும் அந்த வேகத் தோடு ஏறக்குறையச் செல்லும். எனவே, அரவிந்தர் அணியும் உடைகள்; உடையைப் போலவே வீடு, வீட்டைப் போலக் குதிரை குதிரைக் கேற்ற வண்டி இதுதான்் அரவிந்தருடைய வாடிக்கையாக இருந்தது.

பரோடா மன்னர் அரவிந்தர்மீது அளவற்ற பற்றுடையவர். வாய் திறந்து அவர் ஒரு வார்த்தை மன்னரைக் கேட்டால், கேட்டதெல்லாம் உடனே கிடைக்கும். அத்தகையவருக்கு இத்தகைய ஒட்டை உடைசல் வாழ்வு தேவைதான்ா? காலத்துக்கும் - மரியாதைக்கும் ஏற்றவாறு எளிதாகவே - ஆனால், அழகாகவே வாழலாம் அல்லவா? -