பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

ஏதோ ஒரு சக்தி அவரிடம் இருப்பதாக நினைத்தார்கள். ஆனால், இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.

உடனே அரவிந்தர், வேறு பல சாதுக்களை அப்பகுதி யில் சந்தித்தார். யாரிடமும் அவருக்கு எந்தவிதப் பற்றும், ஞானமும் உண்டாகவில்லை. ஆனால், அங்கே இருந்த விஷ்ணு பிரபாகர்லேலே என்ற மாராட்டிய யோகி ஒருவர் மட்டும், அரவிந்தரிடம் யோகக் கலையைப் பற்றிய அற்புதங்களை விளக்கியுரைத்தார்.

அந்த மராட்டிய சாது கூறிய ஞானவுரைகள் அரவிந்தருக்குப் புத்துனர்சியை அளிக்கவில்லை. எதை நாடி வந்தாரோ அரவிந்தரர், அதை அவரால் பெற முடியவில்லை. இருந்தாலும், அவருடைய ஆன்மீகச் சிந்தனையின் நாட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

அரவிந்தர் பரோடாவிலிருந்த போதே இந்தியப் பண் பாட்டையும், ஆன்மீகச் சிந்தனை ஞானத்தையும், யோகக் கலைகளின் அற்புதங்களையும் நன்றாகவே அறிந்துப் பயிற்சியும் பெற்றிருந்தார்.

பரோடாவில் அரவிந்தர் இருந்தபோதே அவருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற பேச்சு, அவருடைய தமையனார்களால் துவங்கியது. ஆனால், அவருக்கு திருமணம் செய்து கொள்வதிலே நாட்டமில்லை.

கல்லூரி விடுமுறை நாட்களில் அரவிந்தர் கல்கத்தா நகர் வருவார். உறவினர்களுடன் தங்கி மகிழ்வார். அப்போதும் உறவினர்கள் அவருக்காக பெரிய பணக்காரர்கள் வீட்டுப் பெண்ணைப் பார்த்து திருமணம் முடிக்க முயன்றார்கள்,

அரவிந்தர் தொடர்ந்து திருமணப் பேச்சுக்கு மறுப்புக் கூறி வரவே முயற்சிகளில் இறங்கிய உறவினர்கள் அனைவரும், அவர் பிரம்மச்சாரியாகவே இருக்க நினைப்பதாக எண்ணி, அவருடைய திருமணப் பேச்சை பேசாமலே நிறுத்திக் கொண்டார்கள்.