பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 427

மதித்தார்; வணங்கினார்; தாய்நாட்டை அடிமைப் படுத்திய அரக்கன் யார்? இங்லிஷ்காரன் அல்லவா?

எனவே, தனது தாய்நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலேயன் என்ற அரக்கனை இரத்தபானம், செய்ய விழையும், அரக்கனாகவே மதித்தார். அதைத் தடுக்கும் வழி என்ன? சிந்தித்தார். இரவும் - பகலுமாக அரவிந்தர்.

அதற்கு அவர் என்ன யோசனை கூறினார். அது இது :

அத்யாத்ம சக்தியால்தான்், அதாவது பரமான்மா சீவான்மா என்ற ஆன்மத் தத்துவங்களால்தான்், பாரத நாட்டின் தூக்கம் கலையும் என்று அரவிந்தர் நம்பினார். அவருக்கு தனக்குள்ள சக்திமீது அதிக அளவு நம்பிக்கை இருந்தது என்று அவர் தமது மனைவிக்கு எழுதினார்.

வீழ்ச்சியுற்ற இந்தச் சமுதாயத்தை எழுப்பி விடும் வலிமை, பலம், எனக்குள் இருக்கிறது என்பதை நான் அறிவேன். இவ்வாறு நான் கூறுவது எனது உடல் வலிமையை அன்று.

கத்தியோ, துப்பாக்கியோ துக்கி நான் போர் புரியச் சொல்லவில்லை. என் பலம் - ஞான பலம்.

சத்திரியத் தேசு மட்டும் தேசு அன்று, பிரம்ம தேசும் இருக்கிறது. இத் தேசு ஞானத்தின் மீதுள்ளது.

'மிருனாளினி, தேசு தேசு என்கிறேனே, அந்தத் தேக என்றால் என்ன என்று உனக்குப் புரிகிறதா?”

“தேசு என்றால் அழகு, உறைப்பு, ஒளி காங்கை, கீர்த்தி, கூர், புலம், பொன், மகத்துவம், மனக்கதி, மூளை, விந்து, வீரம் என்று பொருளாகும்”.

'பாரத நாட்டை ஆங்கில அரக்கனிடமிருந்து விடுவிக்க சத்திரிய வீரமிருந்தால் மட்டும் போதாது. பிரம்ம தேசும் தேவை. அதாவது, ஆன்ம வழிபாடுகளியற்றும் தெய்வ வீரமும் தேவை' என்கிறார் அரவிந்தர். அந்த தெய்வதேசு யோகமாகவும், ஆன்மீகமாகவும், தியானமாகவும் இருக்கலாம் அல்லவா?