பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி #29

இந்த இடத்தில், இன்று நாட்டில் அதிக மாகப் பெருகிவிட்ட போலிச் சாமியார் களுக்குச் சாட்டையடி த ரு வ து .ே ய ர ல , அரவிந்தர் தனது கருத் தை தெளிவாகக் கூறி யிருப்பதை நாம் நெஞ்சத்தில் நிறுத்த வேண்டும்.

அரவிந்தர் மேலும் தமது மனைவிக்கு எழுதும்போது:

"ஈசுவரன் இருப்பது மெய்யானால், அவனை அறியவும், அடையவும் ஏதாவது ஒரு வழி இருக்கும். அந்த வழி எவ்வளவு அபாயகரமாக இருந்தாலும் சரி, அவ்வழியே செல்ல நான் உறுதி பூண்டு விட்டேன்' என்று அரவிந்தர் குறிப்பிடுகிறார். இதற்கு என்ன பொருள்? தாய்நாடு எந்த வழியிலாவது விழிப்படைய வேண்டும் என்ற முனைப்போடு அவர், ஆன்மீக எழுச்சியை மக்களுக்குள் எழுப்புகிறார் என்பதுதான்ே பொருள்?

"பகவான் எனக்கு அளித்துள்ள குணங்கள் தேசு, உயர்ந்த கல்வி, வித்தைகள்; தனம் அனைத்தும் கடவுளுடை யனவே என்பது எனது உறுதியான நம்பிக்கை'என்கிறார்.

அவர் மேலும் இது பற்றி கூறும்போது : 'குடும்பத்தினரின் பராமரிப்புக்குத் தேவையான அளவுக்கே, இன்றியமையாத தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்ய நமக்கு உரிமை உண்டு.”

'எஞ்சியதை, அதாவது தனக்குப்போதுமானவை போக

மிகுதியுள்ளதை, பகவானிடமே நாம் திருப்பித் தந்துவிட வேண்டியதுதான்் முறை'.