பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி # 35

அரசியல் புரட்சியிலே சித்தரஞ்சன்தாஸ், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் அரும்பாடுபட்டவர்கள் ஆவர்.

ஆன்மீக எழுச்சி அரசியலிலே கலப்பதற்கு இராம கிருஷ்ண பரமஹம்சரும், விவேகானந்தரும் உதித்தார்கள் - வங்க மண்ணின் பெருமையை உருவாக்க இவர்களுள் குறிப்பாகக் கூறுவதான்ால் சுவாமி விவேகானந்தரடிகள், வங்க மண் மட்டுமல்லாமல், பாரத நாடு மட்டுமின்றி, ஏன் உலகத்திலேயே ஒர் ஆன்மீக அரசியல் எழுச்சியை உருவாக்கினார் எனலாம்.

வங்காளத்திலே மட்டுமன்று, தமிழகத்து மண்ணிலேயும் வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளார், தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார், கப்பலோட்டிய வீரத் தமிழன் வ.உ.சி. தேசியத் தியாகச் சிங்கம் சுப்பிரமணிய சிவா, தமிழ்த் தென்றல் திரு.வி.க., புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார், நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை, தினமணி டி.எஸ். சொக்கலிங்கம் போன்ற நாவலர்களும், பாவலர்களும், இலக்கிய ஆய்வாளர் களும் அரசியல் புரட்சிக்கு வித்தாக விளங்கி வந்தார்கள்.

ஆன்மீகத்தில் அரசியலைக் கலந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகளார், சதாவதான்ி பாவலர் செய்குத்தம்பி, கலைஞர் எஸ்.எஸ். விசுவநாதாஸ் போன்ற பலர் இந்திய தேசியம் சுதந்திர மாக நடமாட வழி வகுத்த கொள்கைக் கோமான்களாகத் திகழ்ந்தார்கள்.

ஆனால், 1905-ஆம் ஆண்டில்தான்், இந்திய நாட்டில் உண்மையான விழிப்புணர்ச்சி உருவானது. சுவாமி விவேகானந் தருடைய வீரமுழக்கங்கள் அவரது மரணத்திற்குப் பிறகுதான்் மகத்தான் பயனைத் தந்தது. மக்கள் ஒன்று பட்டுத் திரண்டு சுதந்திரப் போரிலே நேரடியாக ஈடுபட்டார்கள்.

1905-ஆம் ஆண்டில் என்ன நடந்தது மக்கள் விழித்தெழு மளவிற்கு? வங்காளத்தில் புரட்சி வீரர்களும், ஆன்மீகச் சிந்தனை யாளர்களும், சுதந்திரப் பேரியக்கப் பழி வாங்கல்களும்,