பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

அரவிந்தர் மீது ஒராண்டு நடந்த அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு:

அரவிந்தர் மீது அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு எனுமோர் வழக்கு பிரிட்டிஷ் ஆட்சியால் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு ஓராண்டுக் காலம் நடந்தது. மற்ற புரட்சிக்காரர்களோடு அரவிந்தரும் அலிப்பூர் சிறையிலே பூட்டப்பட்டிருந்தார்.

இந்த வெடிகுண்டை அரவிந்தர் செய்தாரா? அந்தச் சதிகளிலாவது அவர் ஈடுபட்டவரா என்றால் இல்லை. புரட்சிக் கருத்துக்களை எழுதினார், பேசினார் என்பதற்காக, மற்ற புரட்சிவாதிகள் செய்த குண்டு வீச்சு சம்பவங்களில், அரவிந்தர் பெயரையும் பிரிட்டிஷ் அரசு வலிய வற்புறுத்தி சேர்த்து, அவரைப் பழிவாங்கவே இந்த வழக்கை அவர்மீது ஜோடித்தது.

இது வெடிகுண்டு வழக்கு என்பதால், சிறையிலே உள்ள கைதிகள் அனைவரும் வரம்பு மீறித் துன்புறுத்தப்பட்டார்கள். எல்லாரும் ஒரே விதமாக வேலை வாங்கப்பட்டுக் கொடுமைக்கு ஆளானர்கள். எல்லாக் குற்றக் கைதிகளும் ஒரே சிறையில் பூட்டப்பட்டார்கள். காரணம், அந்தக் காலத்திலே சிறையில், ஏ வகுப்பு, பி.வகுப்பு, சி. வகுப்பு என்ற பிரிவுகள் கிடையாது.