பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணின் பெருமையைப் போற்றி அரவிந்தர் எழுதிய கடிதங்கள்!

அரவிந்தருக்கு இருபத்தொன்பதாம் வயதில் திருமணம் நடந்தது. மனைவி மிருனாளினி தேவிக்கு அவர் சில கடிதங்களை எழுதினார். அவை அனைத்தும் புத்தகமாக வெளிவந்துள்ளது.

அக் கடிதத்துள் ஒன்று. அவர் பாரத பெண்மையைப் பற்றிச் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதாகும். அதை ஒவ்வொரு இந்து பெண்மணியும் படிக்க வேண்டும் என்பதற்காகவே இங்கே வெளியிட்டுள்ளோம். அது இது :

அன்புள்ள மிருனாளினி.

நீ எழுதிய கடிதம் எனக்கு ஆகஸ்ட் 15-ஆம் நாள் கிடைத்தது. உனது பெற்றோர் மறுபடியும் துயரப்படுவதை அறிய நான் வருந்துகிறேன்.

எந்தப் பையன் காலமானான் என்பதை நீ எழுதவில்லை. துயரப்படுவதால் என்ன பயன்? உலகத்தில் இன்பத்தைத் தேடும்போது, அதற்கிடையில் துன்பமே காட்சி தருகின்றது.