பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

எஞ்சியிருப்பதை ஆண்டவனிடமே திரும்ப ஒப்படைத்து விடவேண்டும்.

எல்லாவற்றையும், நான் எனக்காகவும், எனது இன்ப நுகர்ச்சிக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் செலவழித்தால் என்னைத் திருடன் என்றுதான்் கூறவேண்டும்.

கடவுளிடமிருந்து செல்வத்தைப் பெற்றுக் கொண்டு, கடவுளுக்காகச் செலவு செய்யாதவன் திருடன் என்று இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இதுவரை நான் ஆண்டவனுக்கு இருப்பத்தைந்து பைசா கொடுத்துவிட்டு. என் சொந்த இன்பத்துக்காக எழுபத்தைந்து காசுகளைச் செலவழித்து விட்டு உலக இன்பத்தில் மூழ்கிக் கிடந்தேன்.

ஆயுளில் பாதி வீணாகச் சென்று விட்டது. மிருகங்கூடத் தன் வயிற்றையும், தன் குடும்பத்தின் வயிற்றையும் நிரப்பும் வேலையை வெற்றிகரமாகச் செய்து வருகின்றதே!

இவ்வளவு காலமும் நான் மிருகங்களையும், புழுக்களையும் போல் வாழ்ந்திருக்கின்றேன் என்பதைப் புரிந்து கொண்டு விட்டேன். இதை அறிந்ததால் எனக்கு மிகத் துன்பம் உண்டா கின்றது. எனக்கு என்மீதே வெறுப்பு ஏற்படுகின்றது.

இனி அப்படி இருக்கமாட்டேன்; இந்தப் பாவத்தை என் ஆயுளில் செய்ய மாட்டேன். ஆண்டவனுக்குத் தருவது என்றால் என்ன பொருள்? அறப் பணிக்காகச் செலவழித்தல் என்று பொருள்!

சரோஜினிக்கும், உஷாவுக்கும் பணம் கொடுத்ததைப் பற்றி எனக்கு வருத்தமில்லை. பரோபகாரம் ஓர் அறம்தான்்.