பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25: ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அந்தச் சிங்கம் தன்னை யாராவது காண வந்தால், அவர்கள் அதைப் பார்க்க முடியாதபடி கூண்டுக் கதவுக்குப் பின்னால் ஓடி ஒளிந்து கொள்ளும் பழக்க முடையது, மீரா இதைக் கவனித்தார்.

ஒரு நாள் மீரா கூண்டருகே சென்று சிங்கத்துடன் பேசினார் சிங்கமாவது பேசுவதாவது என்று கேலி செய்கிறீர்களா? நஎம், மிருகங்களுடன் பேசினால், அவை உற்றுக் கேட்கும் பண்புடையது; மனிதர்களுடைய பேச்சில் அப்படி ஒரு கவர்ச்சி மிருகங்களுக்கு உண்டு. இப்போதும் அதே காரணத்தோடுதான்் மீரா சிங்கத்துடன் பேசியதைக் கூறிகிறார். கேட்போமா?

நான் அந்தச் சிங்கத்துடன் இனிமையாகப் பேசினேன். ஓ, சிங்கமே! வனராசவே, மிருகங்களுக்குள் வீர நாயகராகத் திகழும் நீ எவ்வளவு பேரழகோடு இருக்கிறாய்? அப்படிப் பட்ட வீரத்திலகமே, ஏன் நீ. மனிதர்களைக் கண்டால் ஓடிப் போய் ஒளிந்துக் கொள்கிறாய்? நாங்கள் எல்லாம் உன்னைப் பார்க்க எவ்வளவு ஆசையோடு இருக்கிறோம்? என்றேன்.

எனது பேச்சைக் கேட்ட அந்த வன வேந்தனான சிங்கம், மெதுவாக எனது பக்கம் திரும்பி, என்னைப் பார்த்தது! பிறகு தனது கழுத்தைச் சிறிது என் பக்கம் நீட்டியது. சிறிது நேரம் பொறுத்து அந்தச் சிங்கம் தனது காலை எனது பக்கம் கொண்டு வந்தது.

இறுதியாக அது என் பக்கம் வந்து, தனது முகக்தைக் கம்பிகளின் மீதுவைத்துக் கொண்டு என்னுடன் பழகியது. கடைசியில் என்னைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒருவர் வந்து விட்டாரே என்று சிங்கம் என்னிடம் கூறுவதுபோல இருந்தது.

இவ்வாறாக மீரா, விலங்குகளிடமும், மரங்களுடனும், பறவைகளுடனும் பேசும் பயிற்சிக்குரிய பழக்கம் கொண்டது - அந்தப் பாரீஸ் நகர் அடவியில்தான்் என்பதை உலக மக்களுக்கு உணர்த்தினார் மீரா!

இந்தச் சம்பவங்களை எல்லாம். மீரா, தெய்வீக அன்னையாகப் பக்குவம் பெற்ற பிறகு நமக்கும் கூறுகிறார்.