பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 43

திருவடிகளுக்கே முழு மனத்தோடு காணிக்கையாக்கி விட்டார் திருமதி. மீரா,

அரவிந்த மகரிஷிக்கு அனைத்தையும், தன்னையும் காணிக்கையாக்கிவிட்ட திருமதி. மீராவுக்கு, விண்வெளி விரிந்து பரந்த வானளாவிய அகண்ட ஆன்மீக தெய்வீக மோன ஒளி, அரவிந்த பெருமானிடமிருந்து அன்னை பெருமாட்டிக்குரிய புறமும் அகமும் பரவி நின்று ஊடுருவியது. மிக பிரமாண்ட மான சாசுவதமான பேரமைதியில் அன்னையின் ஆன்மா ஆழ்ந்து நின்றது.

பல்கலை வித்தகங்களில் எவ்வளவோ அரிய ஆன்மானு பவங்களும், ஞான சித்துக்களும் பெற்றிருந்த அன்னை பெரு மாட்டியான மீரா, மகரிஷி அரவிந்தரிடம் பெற்றிட்ட ஞான மோன நிலையை இதுவரை அவர் எவரிடமும் பெற்றதில்லை.

அதுபோலவே, அரவிந்தரிடம் அவர் பெற்றிட்ட எல்லாமும் இறுதி வரை அன்னையை விட்டு அகன்றதும் இல்லை. அன்னையின் அகத்திலேயே அந்த பேரானந்த அமைதியும் - ஆன்ம ஞான மோனமும் ஐக்கியமாகி - ஓர் ஆன்ம சக்தியாக நாளுக்கு நாள் பொலிவுபெற்று அருளாட்சி யாக மலர்ந்துவிட்டது. இந்த உணர்வுகளைப் பற்றி அன்னை மீரா, மறுநாள் தனது நாட்குறிப்பில் பதிவு செய்ததாவது :

'காரிருளில் நூற்றுக் கணக்கானவர்கள் அழுந்தி இருப்பினும் கவலையில்லை. நேற்று நாம் பார்த்த அந்த மகான் இந்த உலகத்தில் இருக்கிறார். அவர் இங்கே இருப்பது ஒன்றே, நம் இருள் - ஒளியாக மாறி, கடவுள் ஆட்சி இந்த உலகத்தில் மீது உருவாக்கப்படும் நாள் ஒன்று வரும் என்பதற்குரிய போதுமான சான்று ஆகும்.

அன்னை பெருமாட்டியும், மகான் அரவிந்தரும் சந்தித்தக் காட்சியைப் பற்றி ஓர் ஆன்மீக துறவி மகரிஷி அரவிந்தரிடம் கேட்டபோது, 'இறைவனுக்குத் தம்மை முழுமையாகக் காணிக்கை ஆக்கிக் கொண்ட ஒருவரை, எனது வாழ்நாளில் முதன்முதலாக அன்றுதான்் கண்டேன்' என்றாராம்.