பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

மகான் அரவிந்தரும், அன்னை பெருமாட்டி மீராவும் சந்தித்ததால், அந்தச் சக்திகள் ஓர் அறப் பொருளாகிய தெய்வப் பணி ஆற்றலாவதால், உலகம் அந்தச் சக்தியால் பலவித நன்மைகளைப் பெறுகின்றன.

அசுர சக்திகளான உலகப் போர் மூண்டு, மக்கள் இடையே தீய சக்திகளின் செல்வாக்கு, ஆயுத பலம், போர் வன்முறைகள் பெரிதும் அதிகரித்ததால், அந்தச் சக்தியை முறியடிக்கும் தெய்வப் பணி தற்காலிகமாக தடைபட்டு நின்றது.

உலக ஆன்மீக முன்னேற்றத்தைத் தடை செய்வதே அந்த அசுர சக்திகளின் தீய நோக்கமாகும்.

1914-ஆம் மார்ச் 29-ஆம் நாள் புதுச்சேரி நகர் வந்த அன்னை மீரா, 1915-ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாளன்று, உலகப் போர் பணி காரணமாக மீண்டும் ஃபிரான்ஸ் நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஃபிரான்ஸ் நாட்டுக்குப் புறப்படுவதற்கு முன்நாள், அதாவது பிப்ரவரி 21-ஆம் நாளன்று, முதன்முதலாக அன்னை மீரா அவர்களது பிறந்த நாள் விழா புதுச்சேரி நகரில் மிக எளிமையாகக் கொண்டாடப்பட்டது.

ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில், அன்னை ஓராண்டுக் காலம் தங்க வேண்டிய அவசியம் இருந்தது.

தீய சக்திகளின் அசுர பலத்தால் வேதனை பெற்ற உலகத்தின் துயரங்களை அன்னை பெருமாட்டி தனது உடலில் தாங்கிக் கொள்ள வேண்டியது இருந்தது.

உலக அன்னை அல்லவா அவர்? இந்த உலக இன்ப துன்பங்களை தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டவர்தான்ே அன்னை: அதனால், உலகம் அனுபவிக்கும் எல்லாத் துன்பங்களும் அவருடைய சொந்த துன்பங்களாயின.

இந்த அசுர பலத்தின் தாக்குதலால் அன்னை உடல் நலிந்து மெலிந்து, பெரிதும் பாதிப்புக்கு ஆளானது.