பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 6割

தெளிவாக, சந்தேகத்திற்கே இடமில்லாம் அன்னை அவர்கள் உணாநதாா.

அன்றைக்கு அரவிந்தர் மகானின் ஆன்ம ஞான வட்டத்து சமூகத்துக்குள் நுழைந்த பிரான்சு நாட்டு மீரா என்ற அன்னை, தான்் இறக்கும் வரை புதுச்சேரி நகரை விட்டு அகலாமலே அவருடன் இருந்து ஞானத் தொண்டு புரிந்தார்:

மகான் அரவிந்தருக்கு இறைவன் இட்ட ஆணைப்படி அவரது தெய்வீகப் பணிகளைச் செயலில் நிறைவேற்றி வைக்கும் வேலையில் முழு மனதுடன் அன்னை ஈடுபட்டார். சிறு வயது முதல் ஆண்டவன் தன்னை இறை தொண்டுகளுக்காகவே பணித்தார் என்ற எண்ணத்தில் அன்னை தளராமல் ஆசிரம நிர்வாகத்தை உருவாக்கினார்.

மகரிஷி அரவிந்தர், திருமதி அன்னை அவர்களின் இலட்சியம் என்ன என்பதை, இந்த புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலே குறிப் பிட்டிருக்கிறோம். மீண்டும் ஒருமுறை படித்தல் நலம் அல்லவா!

ஆசிரமம் அமைந்தது

தெய்வீக ஞானத் தொண்டு புரியும் அன்னை அவர்கள், புதுச்சேரி வருகை தருவதற்கு முன்பு, ஞானத் தொண்டுகளுக் காக, தெய்வீக வாழ்க்கையை மக்களிடம் தோற்றுவிக்கும் ஒரு புனித புதிய பணிக்காக, புதியதோர் தெய்வீக ஒளி வாய்ந்த ஓர் ஆசிர உலகை, அரவிந்தர் மகரிஷி தோற்றுவிக்கவில்லை.

மகான் அரவிந்தர் சிறை மீண்டு, நான்கு ஐந்து பேர் களுடன், வட நாட்டை விட்டு, ஆங்கிலேயர்களுடைய ஆட்சிப் பிடிப்பை விட்டகன்று, பிரெஞ்சு ஆட்சியின் அதிகாரத்திற்குட் பட்ட புதுச்சேரி நகர் வந்தபோது ஆசிரமம் இருந்ததில்லை.

மகான் அரவிந்தருடன் புதுச்சேரி வந்த அந்த நான்கைந்து பேரும், ஒரே வீட்டில் வாடகைக்கு எடுத்து வசித்தார்கள். அவர்கள் இடையே ஒழுங்கோ, கட்டுப்பாடோ கிடையாது.