பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 75

என்ன கூறினார் தெரியுமா அந்த மூதறிஞர்? அன்னை மீரா அமைத்துள்ள சமுதாயத்தைக் கண்டு, அன்னையை நேரிடை யாகவே பாராட்டி மகிழ்ந்தது மட்டுமன்று. இதுதான்் வேத ரிஷிகள் கண்ட கனவு என்று பாராட்டி மகிழ்ந்தார் அவர்.

எல்லாரும், சரிநிகர்; சாதி மத பேதம் எதுவுமில்லா சமத்துவம் ஆண், பெண் வித்தியாசம் இல்லாத, அந்தராத்மா வில் உறவில் இயங்கும் இலட்சிய சமுதாயமே இந்தக் கல்விக் கோட்டத்தில் உருவாக்கப்படுகின்றது” என்று அந்த வயோதிகள் அன்னையின் கல்விப் புரட்சியை வாழ்த்திப் பாராட்டினார்.

இந்த உலகத்தில், ஒரு புதியதோர் உலகத்தை உருவாக் கும் நோக்கம் ஒன்றுதான்் அன்னையின் நோக்கம். அதற்கு அவர் தன்னால் உருவாக்கப்பட்ட ஆசிரமத்தையே நடுநிலையாக நிறுத்தினார்.

அரோவில் நகரை அன்னை அமைத்ததேன்?

புதுச்சேரி நகரிலே இருந்து பத்து மைல் தூரத்தில் இன்று அரோவில் என்று ஒரு புதுநகரம் இருக்கின்றது. அந்த நகரத்தை அன்னைதான்் முதன் முதலாக உருவாக்கினார்.

இந்த அழகுமிகு நகரத்தில்தான்், இன்று இந்தியாவிலே உள்ள பிற மாநிலத்தவர்களும், வெளிநாட்டவர்களும் வந்து தங்கி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அரவிந்தர் ஆசிரமத்திலே ஆன்ம ஞான சாதகர்களாக இருக்கிறார்கள்.

இந்த அரோவில் நகரத்திலே வாழ்கின்ற தெய்வீக வாழ்க்கை; உலக சாதகர்கள் இடையே, மதபேதமோ, நாடுகள் வித்தியாசமோ, சாதிகள் ஏற்றத் தாழ்வுகளோ இல்லாமல், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் சரிநிகர் சமத்துவத்தோடும், சகோதரத்துவப் பாசத்தோடும், சகலவித சுதந்திர உரிமைகளோடும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக் கின்றார்கள்.