பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

நீ விரும்பினால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள் பவர்களில் ஒருவனாக இருக்க முடியும்” என்பது அன்னை அவர்களுடைய கருணைமிக்க, மனிதநேயச் செய்தியே ஆகும்.

பூக்கள் பற்றி அன்னை கருத்து

ஆசிரம வாழ்வில், அரோவில் தங்கி தெய்வீக வாழ்க்கை வாழ்பவர்களிடம் பூக்களுக்கும் சிறப்பான இடம் உண்டு.

ஆசிரமத்தின் முக்கியமான கட்டிடத்தில் - இங்குதான்் மகரிஷி அரவிந்தர் பெரும்பாலும், தெய்வீகப் பண்புள்ள அன்னை அவர்களும் வசித்து வந்தார்கள்.

இந்த இடத்தில் நூற்றுக் கணக்கான பூச்செடிகள் இருக்கின்றன. ஆசிரமத்தில் உள்ள எல்லா வீடுகளிலுமே மலர்ச் செடிகள் இருக்கின்றன.

மகான் அரவிந்தர், அருட்டிரு அன்னை அவர்களது சமாதி நாள்தோறும் காலை நான்கு மணிக்கு அன்றன்று பூத்த பூக்களால் அருமையான அழகோடு அலங்காரம் செய்யப் படுகின்றது.

இந்த அழகுமிகு அலங்காரப் பணிகளை ஆசிரம சாதகிகள் நாள்தோறும் பக்தியோடு செய்வதைக் காண்பவர் களின் மனத்தில் பக்தி ஊற்றுக் கண்கள் சுரக்கும்!

பூந்தோட்டங்களைப் பராமரிப்பதற்குகென்று ஒரு சாதகர் இருக்கிறார். அவருக்கு உதவியாக மேலும் சிலர் பணியாற்று கிறார்கள்.

ஆசிரமத்தில் வாழ்பவர்களுக்கு ஆசிரம மலர் வீட்டிலிருந்து பறித்துச் சென்று சமாதியில் வழிபாடு செய் வதற்கு என்றும், தங்கள் அறைகளில் வைத்துக் கொள்வதற்கு என்றும் பூக்கள் கொடுக்கப் படுகின்றன.

திருமதி அன்னை அவர்கள் தனது வாழ்த்துதலை, ஆசியை, ஆன்ம உதவியை தினந்தோறும் ஆசிரம சாதகர்களுக்கு மலர்கள் மூலமாக வழங்கி வந்தார். என்ன காரணம் இதற்கு?