பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 79

ஆன்மீக வாழ்வில் சாதகனின் இயல்பில் மலர வேண்டிய தெய்வீகக் குணங்கள் பல ஆகும். நம்பிக்கை, ஆர்வம், அன்பு, சரணம், பக்தி, ஒளி, சக்தி, மகிழ்ச்சி முதலிய குணங்கள் ஆகும். இந்தக் குணங்கள் எல்லாம் தெய்வ சுபாவங்களின், குணங்கள். இங்கு மனிதர்களிடையே இப்பெயர் பெற்றுள்ள மனித குணங்கள் இந்தத் தெய்வக் குணங்களின் திரிபுகளும், மங்கலான நிழல்களுமே ஆகும்.

ஒவ்வொரு பூவும் தெய்வ குணங்களில் ஒன்றைச் சுட்டிக் காட்டுவதை அருளாளர் அன்னை அவர்கள் அறிவித்தார். மலர்களுக்கு எல்லாம் அக்குணப் பெயர்களையே சூட்டினார். அந்த மலர்களைச் சாதகர்களுக்கு கொடுத்து, சாதகர்களிடம் அந்தத் தெய்வீகக் குணங்களை அன்னை அவர்கள் வளர்த் தாாகள.

இவ்வாறு, அவர்களைத் தெய்வ வாழ்விற்கு அன்னை அவர்கள் வழி நடத்தி அழைத்துச் சென்றார்கள்.

ஆசிரம சாதகர்களிடம் அன்னை அவர்கள், தம்முடைய பணிகளை ஆற்றுவதற்குப் பூக்கள் அவருக்கு நல்ல இணக்கமான கருவியாக, சாதனமாக அமைந்திருந்தன.

அதனால்தான்் ஆசிரம வாழ்வாளர்களான சாதகர்கள் வாழ்வில், பூக்களுக்கென்று ஒரு சிறப்பான இடம் இருந்தது.

அன்னை அவர்களும், ஆண், பெண், குழந்தைகள் அனைவரையும் வாழ்த்துவதையும், ஆசீர்வதிப்பதையும் மலர்கள் மூலமாகவே அதைச் செய்தார்.

அருளாளர் அன்னை அவர்களைப் போற்றும் ஆசிரமத்துக்கு வெளியே வாழும் மக்கள், வணங்கி வழிபாடு செய்யும் அன்னை அவர்களின் ஆன்மீக பக்தர்கள், பக்தைகள், குழந்தைகள் அனைவரும், நாள்தோறும் இன்றும் அதிகாலை நேரத்தில் புத்தம் புதுசாகப் பூத்த பூக்களையே கொண்டு வந்து அன்னை அவர்களையும், மகரிஷி அரவிந்தரையும் போற்றி வணங்கி சமாதிகள் வழிபாடு செய்து வருகின்றதை நாம் பார்த்து மகிழ்கின்றோம். வளர்க அன்னை அவர்களது தெய்வீக வாழ்க்கையின் ஆன்ம ஞானத் தொண்டுகள்!