பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 95

இந்த 'ஆரியன்' என்ற பத்திரிக்கை அரவிந்தர் பாண்டிச் சேரிக்கு வந்த பிறகு, 1914-ஆம் ஆண்டில் அவரால் ஆரம்பிக்கப் القسلسلالا

இந்த வேளையில், பிரெஞ்சு நாட்டு மாதரசி ஒருவர், இந்திய யோகிகளது அறிவாற்றல்களை அறிந்து உணர்ந்து கொள்ள பாண்டிச்சேரிக்குத் தனது கணவருடன் வந்தார்.

புதுச்சேரிக்கு வருகை தந்த அம்மையார், அரவிந்தரைச் சந்தித்தார். இருவரும் கலந்துரையாடினார்கள். அப்போது அந்த மாதரசி தனது நாட்குறிப்பில் பின்வருமாறு எழுதினார்.

'நூற்றுக்கணக்கான மக்கள் இருளில் மூழ்கி இருந்தால் என்ன? நேற்று நாம் பார்த்தோமே, அவர் ஒருவர் இந்த மண்ணில் இருக்கிறாரே! இருள் ஒளியாக மாறும் என்பது, அவர் இருப்பதாலேயே தெரிகிறது. அப்போது பெருமானே உன் ராஜ்யம் மண்ணுலகில் உருவாகி நிலைத்து நிற்கும்' என்று அந்த நாட்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

அரவிந்தரும், அந்த அம்மையாரும் சந்தித்த அந்த சந்திப்பு, ஒரு தெய்வ சித்தம்போலவே தெரிந்தது. அந்த அம்மையார் அப்போது அவரது கணவருடன் வந்திருந்தார்.

முதல் உலகப் போர் 1914-ஆம் ஆண்டு முதல் 1918ஆம் ஆண்டு வரை அப்போது நடந்து கொண்டிருந்த நேரம், அந்தப் போரில் அவ் வம்மையாரது கணவர் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால், அந்தத் தம்பதியர் பிரான்சு நாட்டுக்குத் திரும்பிச் சென்று விட்டார்கள்.

போர் முடிந்தது! அந்த அம்மையார் திரும்பவும் பாண்டிச்சேரிக்கு வந்தார். புதுச்சேரியிலே தங்கி யோக சாதனைகளில் அந்த அம்மையார் ஈடுபட்டார்.

அந்த அம்மையார் பெயர் என்ன தெரியுமா? 'அன்னை மீரா என்பதாகும். ஆனால், அவரை யாரும் இன்று வரை மீரா என்ற பெயரில் அழைப்பதில்லை. அரவிந்தர் ஆசிரமவாசிகளால் அன்புடன் அன்னை என்றுதான்் அழைக்கப்பட்டார்.