பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

 கமலம்: அப்படியானால் அதிக வருமானம் உடையவர்களே அதிகக் குழந்தைகள் பெறலாம் என்று தோன்றுகிறது.

சுந்தரம்: அப்படியில்லை, கமலம்! விரலுக்குத் தக்க வீக்கம் என்று சொல்வதில்லையா. ஏழைவீட்டுக் குழந்தை பள்ளிக்கூடத்துக்கு நடந்துபோகும். பணக்கார வீட்டுக் குழந்தை வண்டியில் போகும். அதனால் அவரவர் அந்தஸ்துக்குத் தக்கபடி செலவு செய்ய வேண்டும்.

கமலம்: அப்படியானால் பணக்காரர்கள் கூட அதிகக் குழந்தைகள் பெறக்கூடாது என்று சொல்லுகிறாரோ?

சுந்தரம்: ஆமாம் கமலம்! அப்படித்தான் சொல்லுகிறார். ஏழையோ பணக்காரரோ மூன்று குழந்தைகள் போதும் என்கிறார். அப்படியானால்தான் குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்க முடியும் என்று சொல்லுகிறார்.

கமலம்: நானும் அப்படித்தான் எண்ணுகிறேன். ஆனால் மூன்று குழந்தைகள் பெற்றபின் எல்லோரும் சன்னியாசியாகிவிட வேண்டும் என்றால் அது எப்படி முடியும்? யாரும் சம்மதிக்கமாட்டார்கள்.

சுந்தரம்: நீ சொல்லுவது சரிதான். சன்னியாசியாகச் சொன்னால் சம்மதிக்கமாட்டார்கள். ஆனால் அந்தப் பெரியவர் யாரையும் சன்னியாசியாகச் சொல்லவில்லை.

கமலம்: எனக்கு நீங்கள் சொல்லுவது விளங்கவில்லை. சன்னியாசிபோல் இருக்காமல் எப்படிக்குழந்தை பெறாமல் இருக்க முடியும் என்று தெரியவில்லை.

சுந்தரம்: அந்தப் பெரியவர் சொல்லுகிறார். மூன்று குழந்தைகள் பெற்றபிறகு சன்னியாசி