பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ஆபுத்திரன்

குழந்தைகள்போல் கூவி அழாநிற்கும். இத்தன்மையுடைய இவ்வுலகத்தை, நீ காவாமல் உனது நலத்தையே கருதிச் செல்லுதல் தகுதியன்று; எந்த நன்மையையும் தன்னுயிர்க் கென்று நினையாது பிற உயிர்களுக்கேயென்று கருதி உழைக்கும் புத்ததேவனது அறம் இஃதல்லவே" என்று கூறினான். அரசன் கேட்டு, "மணிபல்லவத்தை வலங்கொண்டு வணங்கவேண்டுமென்று என்னுள்ளத்தில் எழுந்த வரம்பு கடந்த ஆசையைத் தணித்தல் அரிது; ஆதலால் நான் அங்கு சென்று வருவேன்; யான் வருவதற்குப் பிடிக்கும் ஒருமாத காலம் வரை, இந்நரைப் பாதுகாப்பது உனது கடமையாகும்” என்று மந்திரியை நோக்கிக் கூறி விட்டுப் புறப்பட்டு, வழிக்கொண்டு கடற்கரையை அடைந்து, கப்பலேறி, மணிபல்லவத்தை அடைந்தான்.

மணிமேகலை புண்ணியராசன் கப்பல் வருவதை அறிந்து எதிர்வந்து அழைத்துச் சென்று, அவைேடு அத்தீவை வலமாகச் சுற்றிப் புத்தபீடிகையருகில் வந்து, பழம் பிறப்பை அறிவிக்கும் தருமபீடிகை இது என்று காட்டினாள்; அவ்வளவில் அரசன், அதனைத் தரிசித்து, அன்போடு வலம் வந்து துதித்தான். துதிக்கவே அப்பீடிகை, முன்பு அவனுக்கு அவன் ஆபுத்திறனாய்ப் பிறந்திருந்த செய்திமுழுவதையும் நன்றாகத் தெரிவித்தது. அவன் அதனைத் தெரிந்து வியப்படைந்து, தனக்கு முற்பிறப்பில் ஒருநாள் இரவில் அமுதசுரபியென்னும் அக்ஷயபாத்திரத்தை அளித்த சிந்தாதேவியைச் சிந்தித்து, 'அக்ஷயபாத்திரத்தை என் கையில் கொடுத்து எனக்குப் பெரும்புண்ணியத்தை அளித்த தேவியே! உனது திருவடிகளை நான் பிறக்கும் பிறவிகள் தோறும் மறவாது துதித்து வணங்குவேன்' என்று ஏத்தித் துதித்தான். பின்னர் அவன், மணிமேகலையுடன் எழுந்து தென்