பக்கம்:ஆப்பிள் பசி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்லிவிட்டது போல் பார்ப்பார்கள்.

ஆனால், சற்று முன்னேறி ஆங்கிலப் பழக்கவழக்கம் அதிகம். பரிச்சயப்பட்ட நாளில்,

ஒரு பெண், அதுவும் தாசி குலத்தில் பிறந்து வளர்ந்தவள் நிச்சயம் காதலைப் பற்றி நினைக்கவும் முடியும், பெறவும் முடியும். எனவே, பாப்பாவின் ஆசையில் எந்தத் தவறும் இல்லை என்று எண்ணிய கோமளம் அவளுக்காக இரக்கப்பட்டாள். அவள் படும் வேதனையைக் காண கோமளத்தால் சகிக்கவில்லை, நாடகம் முடியும் வரை காத்திருந்தாள்.

முடிந்தது. கோமளம் தானே வலியச் சென்று, “வா பாப்பா!” என்று அழைத்தாள். பாப்பாவின் முகம் நிமிர்ந்ததும் கோமளத்தின், மனம் பதறியது.

கண்ணீர் மாலை மாலையாகப் பெருகி வாடிய முகம்.. தலை கலைந்து பிசிறுகளாகப் பறந்தது.

கோமளம் பாப்பாவின் காதோடு, “பைத்தியம்! சாமண்ணா கடைசியிலே உன்னைத்தான் திரும்பித் திரும்பிப் பார்த்தான், நீயானால் நிமிரவே இல்லை போ! சாமண்ணா ராத்திரி தூங்க மாட்டான். சோகமா இருப்பான்” என்றாள்.

பாப்பாவின் இமைகள் கொட்டின. ஒரு சின்ன வெளிச்சம். விழி ஓரத்தில் அடித்தது. “அப்படியா?” என்றாள். துக்கமும் இன்பமும் கலந்து வந்த குரல் வெயில் ஊடே மழை அடிப்பது போல் இருந்தது.

“பைத்தியம்! நல்ல சமயத்தில் பார்க்க மாட்டே! நீ பார்க்காததனால் அவன் ரெண்டு வாட்டி கூடவே பார்க்க, அதைப் பல பேர் கவனிச்சா! வா, நாங்க போற வழியில் வெங்கட் லாட்ஜ்லதான் சாப்பிடப் போறோம். நீயும் வா!” என்று அவளை ஆதரவுடன் சேர்த்து இழுத்துக் கொண்டு கூட்டத்தின் ஊடே நடந்து சென்றாள் கோமளம்..


ர்ணா - அர்ச்சுனா நாடகம் முப்பத்திரண்டாம் நாளைத் தாண்டிவிட, சிங்காரப் பொட்டு மேல் ஜவ்வாதும் புனுகும் மணம் வீச, இளம் தொந்தி சற்றுப் பெரிதாகியது. தாடை எலும்பு மறைந்து போய்ச் சதைக் கோளம் ஆகிவிட்டது.

டாக்டர் ராமமூர்த்தி தமது விஸ்தாரமான பங்களா தோட்டத்தில் சாமண்ணாவுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்து, முக்கியமான ஊர்ப் பிரமுகர்கள் அத்தனை பேரையும் அழைத்திருந்தார்.

பசுமையான வாழை இலைகள் போட்டு, பக்கத்தில் வெள்ளி டம்ளர்கள் பளபளத்தன. காஸ் லைட்டுகள் அங்கே தென்னை மரத்தில் சாய்ந்து கொண்டு பளீர் என்று வெளிச்சம்! தனியாகத்

104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/103&oldid=1029732" இலிருந்து மீள்விக்கப்பட்டது