பக்கம்:ஆப்பிள் பசி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னங்கீற்று கட்டி, உள்ளே நளபாகம் நடந்து கொண்டிருந்தது. பாயச வாசனை அந்தப் பிரதேசத்தையே தூக்கி அடித்தது.

பாப்பாவுக்கும் அழைப்பு போயிருந்தது. ஆனால் அவளுக்கு என்னவோ இந்த விருந்துக்குச் செல்ல ஒப்பவில்லை. அந்த அழைப்பின் பின்னணியில் சகுந்தலா இருக்கிறாள் என்பதே காரணம். விருந்துக்குப் போய்விட்டு மனத்தை ரணமாக்கிக் கொண்டு திரும்ப அவள் இஷ்டப்படவில்லை.

ஆனால் ஆறு மணிக்குக் கோமளம் வந்து, “நன்னாருக்கு. வராம இருப்பியோ, சாமண்ணா என்ன நினைப்பான்?” என்று செல்லமாக அதட்டியே அவளை அழைத்துச் சென்று விட்டாள்.

ஒரே மினுமினுப்பாக இருந்தது விருந்தினர் வரிசை! அத்தனை பேரும் சீமான்கள், சீமாட்டிகளாக வந்திருந்தார்கள். ப்ரூச், நாகொத்து, ஒட்டியாணம், காது சரம், அட்டிகை எல்லாம் மின்னின. பல ஜரிகைத் தலைப்பாக்கள்!

சாப்பிட்டு முடிந்ததும் ஆரவாரத்திடையே ராமமூர்த்தி எழுந்து பேசத் தொடங்கினார்.

“சகோதர சகோதரிகளே,

நான் என் தொழிலை விட்டுடலாம்னு பார்க்கிறேன். ஒரு டிராமா கம்பெனியை எடுத்து நடத்துகிறதாக உத்தேசம்.(சிரிப்பு) வேடிக்கைக்காச் சொல்லவில்லை. இந்த கர்ணா - அர்ச்சுனா. நாடகம் அப்படிப் போடு போடென்று போடுகிறது. கம்பெனி வாங்கிய கடன் எல்லாம் அநேகமாக அடைஞ்சுடுத்து. அது மட்டுமில்லை; கம்பெனி நம்ம ஊர் மைதானத்தையே விலைக்கு வாங்கிடும்போல் இருக்கு! (கரகோஷம்).

இவ்வளவும் முப்பத்தைந்தே நாட்களுக்குள், யாரும் இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு அதிகம் சம்பாதிச்சிருக்க முடியாது. இந்த நாடகத்தில, அதென்னவோ அத்தனை ஜனங்களுக்கும் சாமண்ணாவை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நேத்திக்குப் பிறந்த சின்னக் குழந்தை கூட ‘வில் விஜயனே’ பாட்டுப் பாடறது. இன்னும் ஒரு மாசம் நாடகம் நடந்ததுன்னா. ஊர்லே முக்கால்வாசிப் பேரும் அர்ச்சுனர்களாக ஆயிடுவா! (ஒரே சிரிப்பு).

அப்படி ஒரு நாடகப் பைத்தியம் ஏற்பட்டுப் போச்சு. சாமண்ணா நடிப்பாலே! சிங்காரப் பொட்டு அவர்களே இதை ஒத்துக் கொண்டிருக்கிறார் என்றால் சாமண்ணாவைப் பற்றி நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. ஒரு விருந்து நடத்தணும் சாமண்ணா பேருக்குன்னு நான் முதல் முதல் சொன்னப்போ அவர்தான் முன்னாலே நின்னு அது ரொம்பப் பொருத்தம்னு சொன்னவர், இப்படி எல்லோராலும் ஒரே மனதாக எண்ணப்பட்டுப் புகழப்பட்ட சாமண்ணாவுக்கு இந்த

105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/104&oldid=1029734" இலிருந்து மீள்விக்கப்பட்டது