பக்கம்:ஆப்பிள் பசி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து நிற்க நாலைந்து பேர் தாங்கலாகப் பாப்பாவை அழைத்துச் சென்று அதில் ஏற்றினர்கள்.

வெகுநேரம் தெளிவில்லாமல் சோர்வாகவே படுத்திருந்த பாப்பாவுக்கு டாக்டர் அனுப்பிய மருந்தைச் சாப்பிட்டதும் ஒருமுறை வியர்த்துக் கொட்டியது. அப்புறம்தான் பாப்பா கொஞ்சம் ஈன சுரத்தில் முழங்கத் தொடங்கினுள். கோமளத் திற்கு துக்கம் பொங்கி வந்தது. இளம் தளிர் போலப் படுத்தி ருந்த பாப்பாவைத் தொட்டுப் பார்த்து, தலையைத் தடவிக் கொடுத்து, 'இப்ப எப்படி இருக்கு? ஹார்லிக்ஸ் சாப்பிடறயா? இல்ல்ே ரசம் சாதமாய்க் கரைச்சுத் தரட்டுமா?’ என்று கேட் டுக் கொண்டிருந்தாள். பாப்பாவுக்குக் கண்களில் நீர் பனித்தது. கோமளத்தை, 'அம்மா, நீங்க போய் சாப்பிடுங்க, எனக்கு இப்ப ஒண்ணும் வேணும்' என்ருள்.

"எல்லாம் சரியாப் போயிடும். எல்லையம்மனுக்குப் பொங் கல் படைக்கிறதா வேண்டிக் கொண்டேன். டாக்டரும் வந்து பார்க்கறதாச் சொல்லியிருக்கார். கொஞ்ச நேரத்துல வந்துடு வார்' என்ருள்.

விருந்து முடிந்து ராத்திரி பத்து மணிக்குப் பிறகுதான் டாக்டர் வந்தார்.

பாப்பாவுக்கு ரத்த அழுத்தம் சரியாயிருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்த்துவிட்டு இரண்டு மாத்திரைகளைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்லி, "ஆகாரம் கஞ்சிதான்' எனருா.

'நாளையிலிருந்து சாத்துக்குடியும், ஆப்பிளும் நிறையச் சாப் பிடலாம். பாப்பா முட்டை சாப்பிடுவே இல்லையோ' என்ருர்.

மூன்ரும்நாள் பாப்பா சகஜமாக எழுந்து நடமாடத்தொடங்

☾Ꭲ , ‘மாமி, இவ்வளவு உபசாரம் போதும். யார் இப்படிப் பண்ணுவாங்க? சொந்தத் தாயார் கூடச் செய்வாளாங்கறது சந்தேகம்தான்! எத்தனையோ ஜன்மத்துக்கு உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கேன். நான் பூவேலிக்குப் போயிட்டு ஒரு வாரம் கழிச்சு மறுபடியும் வரேன். நீங்கதான் எல்லாத்தையும் கவனிச்சுக்கணும்' என்று கொஞ்சம் கவலையோடு சொன்ன போது பாப்பாவின் கண்களில் ஜலம் வந்துவிட்டது. அவள் கவலை ப்படுவது எதற்காக என்று கோமளம் புரிந்து கொண். Î.-FT Gf.

'வாசலில் குதிரை வண்டியோட உங்க அப்பா காத்துண் டிருக்கார். எல்லாம் எனக்குத் தெரியும். நான் பார்த்துக் ు. நீ புறப்படு, ராகு காலத்துக்கு முன்னே' என்ருள் t f}ff tf¥. -

பாப்பாவைத் தாங்கலாகப் பிடித்துக் கொண்டு போய் வண்டியில் ஏற்றி வழி அனுப்பி வைத்தாள். 108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/107&oldid=1027981" இலிருந்து மீள்விக்கப்பட்டது