பக்கம்:ஆப்பிள் பசி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு விடுகிருேமா?

டாக்டர் பேச ஆரம்பித்தார். 'தசாவதாரம்னு சொன்ன நிறைய டர்னிங் சீன் போடுவீங்க! மாயா ஜாலங்கள், தந்திரக் காட்சியேல்லாம் காட்டுவீங்க! பத்து அவ்தாரங்களும் பத்து தினுசான காட்சிகளாச்சே! துண்டு துண்டா வருமே! நடிகர் களுக்குத் தங்கள் நடிப்புத் திறமையைக் காட்டச் சந்தர்ப்பமே இருக்காதே!'

'நானும் அதைத்தான் சொல்றேன்' என்ருர்வக்கீல்வரதாச் στή.

'அப்படின்ன மச்சகந்தி போடுவோமா? ரொம்பக் கவர்ச்சியா இருக்கும்! சாரதாம்பாளுக்கு மீன்காரி வேடம் போட்டால் பிரமாதப்படுத்தி விடுவாள்!' என்ருர் பாவலர். அவர்தான் நாடகங்களுக்குப் பாட்டு இட்டுக் கட்டுபவர்.

'நன்னப் பேசி துடுக்காகவும் நடிப்பா!' என்ருர் வக்கீல். 'மச்சகந்தின்ன ஆண் நடிகருக்குச் சந்தர்ப்பம் இராது. தவிர, காதல், வீரம், சோகம் எல்லா ரசங்களும் ஒரு கதையில வந்தாத்தான் நாடகம் சோபிக்கும்!'

'ஏன்? மச்சகந்தியில் நிறைய காரம் காட்டலாமே?” 'சிருங்காரத்துக்கு வழி ஏது? ஒருதலைக் காதல்தானே! சந்தனு மகாராஜா மச்சகந்தி மேலே பிரியப் படருர். அவளைப் போய்ப் பெண் கேட்கிருர், தீர்ந்தது கதை. இதில சிருங்காரத் துக்கு இடம் எங்கே?'

'மாயா பஜார்...?' என்ருர் இன்னொருவர். 'ப்ஸ் வத்ஸலா கல்யாணமா? ர்சப்படாது' என்று முகத்தை அழுத்தமாக வைத்துக் கொண்டார் டாக்டர், "சீதா கல்யாணம்?' என்று சிங்காரப் பொட்டு சொல்ல, டாக்டர் முகத்திலிருந்த இறுக்கம் அப்போதும் தளரவில்லை. r

"அப்பா, இதுவரை நான் கிட்டத்தட்ட பன்னிரண்டுநாடகம் படிச்சுட்டேன்' என்று சகுந்தலா இடைமறித்தபோது எல்லார் முகமும் சகுந்தலா பக்கம் திரும்பியது.

"அதில்நல்லதாஒண்ணுச்ொல்லேன் பார்க்கலாம்' என்ருர் J.H. & ta.sf.

"நீங்க சொல்ற எல்லா அம்சமும் பொருந்தியிருக்கிற மாதிரி உள்ள ஒரே நாடகம் சகுந்தலாதான்!” என்ருள்.

"துஷ்யந்தன் - சகுந்தலாவா?' என்று யாரோ கேட்க, சாமண்ணு சகுந்தலாவைப் பார்க்க, சகுந்தலா சாமண் ளுவைப் பார்த்தாள்.

சிறிது நேரம் நிசப்தம். - 'உங்களுக்குப் பிடிக்கிறதா?” என்று பாவலர் சகுந்தலா வைக் கேட்டார். .

'எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆன சாமண்ணுவுக்குப் பிடிச்சிருக்கனுமே, அதுதானே முக்கியம்?” என்ருள் சகுந் தலா. - “. . .

1ᎥᏮ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/114&oldid=1027998" இலிருந்து மீள்விக்கப்பட்டது