பக்கம்:ஆப்பிள் பசி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் அவனை அடிககடி ஆர்வத்தோடு பார்த்துக் கொண் டிருப்பது போலவும் கனவு கண்டாள். -

கல்கத்தா விதிகளில் அவன் கார் பறக்கிறது. கடைத் தெரு, சினிமா ஸ்டுடியோ என்று அலைகிருன். சினிமா சேட் அவனைத் தாங்கு தாங்கென்று தாங்குகிரு.ர்.

"அப்போ உத்தரவு வாங்கிக்கலாமா?' என்று கைகூப்பிப் புறப்பட்டார் சேட்.

விரலில் வைரம்பளபளக்க, இப்படி ஒருமுதலாளி அவனுக் குக்கும்பிடுபோடுவது வாழ்க்கையில் இதுதான் முதல்தடவை! 'மறு பேச்சே வேணும். நான் வந்து விடுகிறேன்' என்ருன் சாமண்ணு.

அன்று ராத்திரியெல்லாம் அவன் தூங்கவில்லை. பொழுது விடிந்ததுதான் தாமதம். அவசரமாக டாக்டர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று அவரிடம் மெதுவாக விஷயத்தைப் பிரஸ்தாபித்தான்.

'எனக்குத் தெரியுமே! சகுந்தலா ராத்திரியே சொன்னளே! அரங்கேற்றத்துக்கு இன்னும்பத்துநாள் கூட இல்லை, கலெக்டர் கிட்டே வேறே நாங்க 'டேட்' வாங்கியாச்சு. ஊரே அமர்க் களப்படுது. இந்த நேரத்திலே நீ எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டுக் கல்கத்தாவுக்குப் போகப் போறேங்கறயே, இது சரியா? நன்ன யோசிச்சயா?” என்று கேட்டார் டாக்டர்.

சாமண்ணு பதில் சொல்ல முடியாத நிலையில் தலைகுனிந்த படி நின்ருன். .

'நீங்க சொல்றது புரியறது டாக்டர். இந்த நேரத்திலே நான் போறது தப்பாத்தான் தெரியும். ஆனல் வாழ்க்கையிலே ஒரு சந்தர்ப்பம் ஒரு வாட்டித்தான் வரும்; அதிருஷ்ட தேவதை ஒரு தடவைதான் கதவைத் தட்டுவான்னு சொல்லுவாங்க. எனக்கு அந்தச் சந்தர்ப்பம் வந்திருக்கு. இதுபோல யாருக் காவது கிடைக்குமான்னு யோசியுங்கோ!' என்ருன் சாமண்ணு. X

'அரங்கேற்றதைமுடிச்சுட்டுப் போறது! அதுக்குள்ளே என்ன அவசரம்?' என்ருர் டாக்டர். -

'நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆன சேட் அவசரப் படருரே!'வர முடியலைன்ன சொல்லிடு. இன்ஞெருத்தரைப் போட்டுக்கறேங்கருரே! அப்புறம் அடுத்த படத்துலே சான்ஸ் தரேங்கருரே! இந்த சான்ஸை விட்டால் மறுபடியும் கிடைக் குங்கறது என்ன நிச்சயம்?' என்ருன். -

"ஒரு சான்ஸ் விட்டா இன்னெரு சான்ஸ் வந்துட்டுப் போறது!” .

'வரலன்ன என்ன செய்வேன்? வீட்டுக் கதவைத் தட்டின ಟ್ವೆಕ್ಟ್ರಿ! அலட்சியப்படுத்தின மாதிரி ஆகாதா? பயாஸ் காப் பயாஸ்கோப்னு ஊரெல்லாம் ஒரே பேச்சாயிருக்கு. 122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/120&oldid=1028014" இலிருந்து மீள்விக்கப்பட்டது