பக்கம்:ஆப்பிள் பசி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாரைப் பார்த்தாலும் பயித்தியமா அலேயரு! சார்லி சாப் ளின், லாரல் ஹார்டி என்கிரு: பட்டனத்திலே இப்ப பயாஸ் கோப்புக்குத்தான் அதிக மவுசாம்! நாடகம் ரெண்டாம் பட்சம் தானம். அதுக்குத்தான் காற்றுள்ள போதே தூற்றிக்கணும்னு பார்க்கிறேன்.' -

'அப்போ உன்னை நம்பிப் பணம் போட்டவங்களை அம்போன்னு விட்டுடப் போறியா? இவ்வளவு பணத்தைக் கெர்ட்டிப் புது நாடகம் தயார் பண்ணினவங்களுக்கு என்ன பதில் சொல்றது? அவங்க பணமெல்லாம் என்ன ஆறது?’’ என்று சற்றுக் கடிந்த மாதிரி பேசினர்.

'அரங்கேற்றத்தைக் கொஞ்சம் தள்ளி வச்சுக்க முடியாதா? ஒரு மாசம் தள்ளி ைஎன்ன? அதுக்குள்ளே நான் கல்கத்தா போய் நடிச்சுட்டு வந்துடறேன்' என்ருன் சாமண்ணு.

'ஹ்ம்! உனக்கு உன் காரியம்தான் பெரிசாப் போச்சு. பணம் போட்டவங்களைப் படிக்கட்டாக்கி மேலே ஏறிக்கப் போறே! இதுதானே உன் நோக்கம்? எல்லாம் வீண் பண விரயம்' என்று சலித்துக் கொண்டார்.

சாமண்ணுவுக்கு அது சுருக்கென்று தைத்தது. 'டாக்டர் ஸார்! என்னைக் கோவிச்சுக்காதீங்க! ஆசீர்வாதம் பண்ணுங்கோ. நான் முன்னுக்கு வர நேரம். கடவுள் புண்ணியத்துலே சேட்ஜி நிறையப் பணம் கொடுத்துட்டுப் போயிருக்கார். இது வரை ஆன ரிஹர்ஸல் செலவை வேணும்னு நான் கொடுத்துடறேன்.'

'எனக்குத் தெரியாது. வக்கீலைப் போய்ப் பாரு. அவர் என்ன சொல்ருரோ அதுப்படி நடந்துக்கோ' என்று ஒரு அலட்சியத்தோடு சொல்லி எழுந்தார்.

சாமண்ணுவுக்குக் கஷ்டமாக இருந்தது. 'டாக்டர் ஒரு முற்போக்குவாதி. அவரே தன்னுடைய பேச்சை அவ்வளவு சரியாக எடுத்துக் கொள்ளாத போது வக்கீல் என்ன சொல்லப் போகிருரோ? . . 'கீழேயிருந்து ஒருத்தன் முன்னேறி அவாளுக்குச் சமமா, அந்தஸ்தாவரதை யாருமே ஒத்துக்க மாட்டா! வீண் ஆசைன்னு சொல்லிடுவா! இவா மட்டும் நிறைய ஆசைப்படலாம். எப் படியும் வக்கீல்கிட்டே சொல்லிட்டுப் புறப்பட வேண்டியது தான. o

இதற்குள் வீட்டுத் தரகர் பல முறை சாமண்ணுவைத் தேடி , வந்து விட்டார். 'பழைய தாசில்தார் வீடு ரொம்ப ராசி. அரண்மனை மாதிரி இருக்கு. குதிரை லாயம் வேறே இருக்கு. வெல்ல மண்டி செட்டியார் அதை வாங்கத் துடிக்கிரு.ர். நான்தான் நிறுத்தி வச்சிருக்கேன்' என்றெல்லாம் ஆசை வார்த்தைக் காட்டிக் கொண்டிருந்தார். .

'பணம் கையிலே வச்சிருந்தா செலவாகிப் போகும். எதை யாவது செய்யுங்கோ' என்று சுண்டி இழுத்தார்.

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/121&oldid=1028016" இலிருந்து மீள்விக்கப்பட்டது