பக்கம்:ஆப்பிள் பசி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று நாள் யோசித்து யோசித்துக் கடைசியில் தாசில்தார் வீட்டை வாங்குவதென்று முடிவு செய்துவிட்டான் சாமண்ணு.

பெருமிதம் தாங்கவில்லை. இப்போதே நாலு பேர் அவனை ஒரு ஆச்சரியத்தோடு பார்ப்பதுபோல் தெரிந்தது. இதற்குமுன் அவனை அலட்சியமாகப் பார்த்தவர்கள் எல்லாம் இப்போது இவனைக் கண்டதும் மேல் துண்டை இறக்கிவிட்டு மரியாதை காட்டிஞர்கள். -

'அப்படியா! அப்படியா! அப்படியா!' என்று நூறு 'அப்படியா போட்டுவிட்டார் வக்கீல் வரதாச்சாரி.

வக்கீல் மாமி கோமளம் கோவிலுக்குப் போயிருந்தாள். அந்த நேரம் பார்த்து, அந்த ஏழு மணி இருட்டில், அவர் வீட்டிற்கு வந்திருந்தான் சாமண்ணு.

கோமளம் மாமி இருந்தால் சும்மா விட்டிருக்க மாட்டாள். அவளது பேச்சு ஒவ்வொன்றும் அவனை ராமபாணமாய்த் தாக்கியிருக்கும்.

'என்ன சாமண்ணு! எங்கே இந்த இருட்ல?' என்று கேட்டார் வக்கீல். -

'உங்களைப் பார்க்கத்தான். மாமி இல்லையா?' என்று தெரி யாததுபோல் விசாரித்தான்.

'இப்ப வந்துருவா. கோயிலுக்குப் போயிருக்கா. என்ன விஷயம் சொல்லு' என்ருர்.

சாமண்ணு லேசாகக் கனைத்துக் கொண்டான். எப்படி ஆரம்பிப்பது என்று சற்று யோசித்துப் பிறகு பேசத் தொடங்கினன்.

'நீங்களே சொல்லுங்கோ ! இந்தக் காலத்துலே யாருக்குத் தான் ஆசை வராது? யாருக்கு இந்த மாதிரி இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும்? என்நிலையிலே இப்படி ஒரு அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியுமா? ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ வேலை செய்யறதுக்கு யாராவது ஐயாயிரம் கொடுப்பாளா? எனக்கு அந்த அதிர்ஷ்டம் வந்திருக்கு மாமா' என்ருன்.

"அப்படியா?” "ஆமாம். இதெல்லாம். ஏதோ கடவுள் கிருபை எனக்கு இப்பளங்கம்மா இருந்து பார்க்கக்கொடுத்துவைக்கலையேன்னு ಟ್ವಿಠ್ಠ நான் முதல் சம்பளம் வாங்கினப்போ ஏழு ரூபாய் கொண்டு கொடுத்தேன். அதை எழுநூறு தரம் கையாலே எண்ணிட்டா. இப்போ ஐயாயிரத்தைக் காண்பிச் சிருந்தா, அப்படியே பெருமையிலே பூரிச்சுப் போயிருப்பா! நான் மட்டும் நல்லபடியா முன்னுக்கு வந்தா அம்மா பேரிலே ஒரு ஸ்கூல்...” - -

"அப்படியா...?” வக்கீல் குறுக்கிட்டு ஒரு 'அப்படியா? போட்டது அவனுக்கு

124 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/122&oldid=1028017" இலிருந்து மீள்விக்கப்பட்டது