பக்கம்:ஆப்பிள் பசி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாள் இரவு, கோவிலுக்குப் போகாதவன், போஞன். பிரா காரத்து விநாயகரிடம் வெகு நேரம் நின்று வேண்டிக் கொண்டு வெளியே வந்தான். -

அர்ச்சனை முடிந்து திரும்பிப்போகும் கோமளம் மாமியை எதிரும் புதிருமாகப் பார்த்து விட்டான். - o 'ஏது சாம்.ண்ணு, ஆளையே காணல்லே? எங்களையெல்லாம் மறந்துட்டியா?' என்ருள் கோமளம். * 'ம்றப்பேனமாமி!” என்று ஈனசுரத்தில்பேச்சைத்தொடங் கியவன் அதுவரை நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் கூறினன். அப்படிச் சொல்லும்போது கூடவே அவன் மனசில் ஒரு சந்தேகமும் ஓடியது. மர்மி வேறு எங்கே தன்னைக் கொத்தி எடுத்துவிடப் போகிருளோ என்ற பயம்தான் அது.

கோமளம் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு சிறிது நேரம் மெளனமாக இருந்தான். -

ஒருஇட்ைவெளிக்குப்பிறகு அவனைப்பார்த்து,'சாமண்ணு, உன் ஆசை எனக்குப் புரியாமல் இல்லை. மத்தவங்க நியாயமும் தெரியறது. வக்கீல் மாமா எல்லாத்தையும் சொன் ஞர். இதெல்லாம் தர்ம சங்கடமான சமாசாரங்கள். எது சரி, எது தப்புன்னு சொல்ல முடியாது' என்ருன் , -

புது நாடகம் தயாரிக்க் இத்தனை செலவு செய்துவிட்டு திடீர் என்று கல்கத்தா போகிறேன் என்று சொல்வது அவளுக் கும் பிடிக்கவில்லைதான். ஆனலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் பேசிள்ை. - - 'பரவாயில்லை; ஒண்ணும் கவலைப்படாதே! ஊரிலே நாலு பேர் நாலு விதமாச் சொல்லுவா. எல்லாரும் இனிக்கப் பேசு வாளே தவிர, காரியம்னு வரப்போதுர விலகிப் போயிடுவா! நான் எங்காத்து மாமாவையும் சேர்த்துத்தான் சொல்றேன்.”

"அவரைச் சொல்லாதீங்கோ மாமி. தங்கமானவர்.” 'தங்கமானவர்தான். இல்லைன்னு சொல்லலை! அவர் வக்கீலா இருக்கிறதாலே சில அசெளகரியங்கள் உண்டு. ஆமா ! இன்ஸ்பெக்டர் முனகாலாவை லேசுப்பட்டவர்னு நினைக்காதே! உள்ளூரப் பகைதான்... விடு... இப்போஒண்ணு சொல்றேன். ஏற்கெனவே, உனக்கு யார் உதவி செய்தாளோ, அவள் காலிலேயே போய் விழு. இந்த நெருக்கடியில் அவளைத் தவிர வேறு யாரும் உனக்கு உதவி செய்ய மாட்டா. கையிலிருக் கிற வெண்ணெயை விட்டுட்டு நெய்க்கு அலையாதே! உன் எல்லா விவகாரங்களுக்கும் பாப்பா ஒருத்திதான் ஆதரவு காட்டுவாள். லேசாவாயைத்திறந்து ஒருவார்த்தை சொன்னப் போதும். உனக்காக அவள் உயிரையும் கொடுப்பா. யாரையும் எதிர்பார்க்காதே! நேரே அவள் கிட்ட போ! விஷயத்தைச் சொல்லு! ஜாம்ஜாம்னு நடக்கும்.'

சாமண்ணு எல்லாவற்றுக்கும் தலையாட்டினன். கோமளம் சொன்ன வார்த்தைகள் இதமாக இருந்தன.

盈器置...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/128&oldid=1028027" இலிருந்து மீள்விக்கப்பட்டது