பக்கம்:ஆப்பிள் பசி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இல்லை சிங்காரம். இதிலே வேறே வழியில்லை, விட் டுடுங்க.'

சாமண்ணுவுக்கு ஒரு தற்காலிக அமைதி வந்திருந்தது. சாயங்காலம் கோவிலுக்குக் கிளம்பினன். துர்க்கைசந்நிதியில் மனம் உருகப் பிரார்த்தனை செய்தான். - . வெளியே வந்து சந்நிதித் தெருவில் நடக்கும்போது, "என்னசாமண்ணு'என்று ஒரு பழக்கப்பட்ட குர்ல் கேட்டுத் திரும்பினன். -

பேஸ்ரி டால் அடிக்க, கோமளம் மாமி பூஜைத் தட்டுடன் நின்று கொண்டிருந்தாள். .

'என்ன சாமண்ணு கண்லயே காணுேம்? உனக்கு விஷயம் தெரியுமோ?' என்று கேட்டு, கன்னமெல்லாம் குது.ாகலத்தில் பூரிக்க் அவனைப் பார்த்தாள்.

'என்ன மாமி?” 'வீட்டுக்கு வா, அவசரம்." x- - மெளனமாய் பதில் சொல்லாமல் நின்ருன். 'என்ன பேசாம் இருக்கே: நீவா. சீக்கிரம் வந்துடு. ரொம்ப ரொம்ப முக்கியம்." - - -

'கோமளம் இருளில் மறைந்தாள். சாமண்ணு கடையை நோக்கிப் போவது போல் ப்ேர்ஞன். மன்ம் சலித்தது. ஏன் அவளைச் சந்தித்தோம் என்று நினைத்தான். போகாமலிருந்தால் அதுவும் தப்பாகிவிடும். ம்ன்ம் ச்ம்ம்திக்கவில்லை. தயங்கிய படியே ஒட்டலுக்குப் போய் காப்பி குடித்துவிட்டு வக்கீல் வீட்டுக்கு நடந்தான். .

வக்கில் விட்ண்ட் நெருங்க நெருங்க கலக்கமாக இருந்தது. நல்லவேளை வர்தாச்சாரி அறையில் வெளிச்சம் இல்ல்.).

இதற்குள் வீடு திரும்பியிருந்த கோமளம் மாமி,"வா! வா! வா!' என்று ஆவ்ல்ாய் அழ்ைத்தாள்.

'உனக்கு ய்ோதம் போட்ஜர்மீன் கிடைச்சாச்சு' . “என்ன மாமி சொல்lங்க், நிஜமாவா!' என்று வியப்பில் வாய் பிளக்கக் கேட்டான் சாமண்ணு.

146)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/136&oldid=1028072" இலிருந்து மீள்விக்கப்பட்டது