பக்கம்:ஆப்பிள் பசி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"என்ன, என்ன?’ என்று பதறிஞன் சாமண்ணு. அவள் நொண்டிக் கொண்டு வர, சாமண்ணு குனிந்து அவள் காலைப் பார்த்தான் காலின் பக்க்வாட்டில் ஒரு பெரிய முன் தைத்திருந்தது. _ چا۔

"ஐயோ, அப்படியே நில்லு. இதோ எடுத்துடறேன்.' அவன் அவள் இடது பாதத்தை. மெதுவாகப் பிடித்து முள்ள்ை அகற்ற முயன்றபோது அவள் பாலன்ஸ் வேண்டி அவனது தோளில் ன்கயை ஊன்றினுள். -

சாமண்ணு முள்ளை எடுத்து அப்பால் எறிந்ததும் சற்று நொண்டியபடியே அவனை விட்டு விலகிக் கொண்டாள்.

பார்வையை ஒரு மாதிரியாகச் சுழ்ற்றிக் கொண்டு, சிரிப்பு உண்டாக்கிய கன்னக் குழிவுகளுடன், 'உங்க சகுந்தலை நாடகம் மாதிரி இல்லை' என்ருள். அவள்.

அவனுக்குப் பெருமூச்சு.வந்தது. - - ; "ஆஞ் இந்த நாடகத்தில் உன் பெயர் பொருந்துகிற மாதிரி என் பெயர் பொருந்தலையே! சுத்த நாட்டுப்புறமான பெயர்!" என்ருன் சலித்துக் கொண்டே. சோர்வுடன் அவன் ஒரு பாறை மீது சாய, அவன் அருகே பாறை மீது கைவைத்த வண்ணம் நின்ருள் சகுந்தலா. : - -

'ஏன் சாமு! பெயர் பொருந்தினத்தான் எல்லாம் பொருந் தினதா அர்த்தமா?' - -

அவள் தணிவான குரலில் கேட்ட்ாள். அந்தத் தணிவு அவளது அந்தரங்கத்தைத் தொடும் அந்நிய்ேர்ன்யத்தைக் காட்டியது. - . . .

'பெயராவது பொருத்தமா இருக்க வேண்டாமா!' 'ஏன் அப்படிச் சொல்றீங்க? பொருத்தமாய்த்தானே இருத்கு சாமு - சகுந்தலா!' -

ல்லை,உனக்கு எந்தவிதத்திலும்பொருத்தம்இல்லாதவன். நான.

"அதை எப்படி நீங்க சொல்லமுடியும்? நான்தான் சொல்ல ம்!' என்ருள் ஒர் உரிமையோடு. * . . . "அப்போ நீயே சொல்லு. நான் பொருத்தமானவன் தான?” -

சாமண்ணுவின் கண்கள் அவள் பார்வையை நோக்கிப் படபடத்தன. & . .

"என் மனம் அதைக் கண்டுபிடித்துவிட்டது.' 'பொருத்தமானவன் என்ரு?" . .

"ஆமாம்.' 'ஹஅம்! என்னிடம் அப்படி என்ன வசீகரம் இருக்கு!'

சாதாரண நடிக்ரா நீங்க? உங்களிடம் உள்ள அந்த நடிப்புக் கலை ஒன்று போதாதா?’’ -

"அது ஒன்று மட்டும் போதுமா?"

Η 48'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/143&oldid=1028087" இலிருந்து மீள்விக்கப்பட்டது