பக்கம்:ஆப்பிள் பசி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கிலத்தில் பேசின்ை. அதை அவள் ரசித்தாள்! அவளு டைய சிரிப்பு காரணத்தோடும் வந்தது. காரணம் இல்லாமலும் வந்தது. ஒரு கோப்பையில் மதுவும், தாம்பாள வெள்ளித் தட்டில் சைவ உணவும் பரிமாறிள்ை அவள். விருந்து முடிந்து பத்து மணிக்குமேல் சுபத்ராவிடம் விடை பெற்று, காரில் ஏறச் சென்றபோது உடம்பு காற்றில் மிதந்தது. எதை நினைத்தா லும் "கிளுகிளுத்தது. வாழ்க்கையில் இவ்வளவு உல்லாசங்கள் இருக்கின்றனவா? -

பத்து நாள் போனதே தெரியவில்லை. பொழுது எப்போது முடிந்தது எப்போது ஆரம்பமாகியது என்பதே புரியவில்லை. ஆனந்தமயமான நினைவுத் தொடரில் சஞ்சரித்தான்! சுபத்ரா பேசிள்ை, சிரித்தாள். காதலோடு பார்த்தாள். ஆலிங்கனம் செய்து கொண்டாள்.அத்தனை உணர்வுகளும் அவனைப் புதுமை யாக்கிக் கொண்டிருந்தன.

பதினேராம் நாள்தான் டூயட் எடுக்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட முக்கால் இந்தி ட்யூனில் பாட்டு. அவனுக்கு சுலபமாக முடிந்தது. சுபத்ரா தமிழ் வார்த்தையில் கஷ்டப்பட் {-sT Gff , . -

இருவரும் ஒரே ஒரு அடியைப் பாட பக்கத்தில் அனைத்து வாத்தியக்காரர்களும் நின்று கொண்டே வாசிக்க, பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது. - . . . .

சின்ன இடைவேளைவந்தபோதுதான் நாற்காலியில் அமர்ந்: திருந்த அவனை, 'ஸ்ார்' என்று ஒரு சிப்பந்தி அழைத்தான். திரும்பிப் பார்த்தபோது ஸெட்டில் யாரோ வந்திருப்பது தெரிந்தது. யார் அது? - -

சகுந்தலா வந்து கொண்டிருந்தாள். 'வாங்க!' என்று ஒரு அலட்சியத்தோடு நாற்காலியைக் காட்டினன் சாமண்ணு. r

“எப்ப வந்தீங்க? எங்க இப்படி திடுதிப்புன்னு?' என்று. காற்றை நோக்கிக் கேட்டான்.

'அப்பா ஒரு மெடிகல் கான்பரன்ஸுக்காக வந்தார். நானும் வந்துட்டேன்' என்று கூறிய சகுந்தலா, "நான் இங்கே ஏன் வந்தேன் தெரியுமா?' என்று குழந்தைத்தனமாகப் புதிர் போட்டு நிறுத்தினள். -

'கல்கத்தா பார்க்கத்தானே?' என்ருன் அவன். 'இல்லை! கல்கத்தா பார்க்கிற சாக்கில்....' என்று இழுத் தாள. - -

சாக்கில்?' என்று கேள்வியைத் தூக்கி நிறுத்தினன் சாமணன. .

அவள் பொய்க் கோபமாகச் சிணுங்கி, சொல்லட்டுமா?' என்று கேட்டாள்.

f ff

'ம்....' என்ருன். -

4.

‘புரியலையா?

161.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/155&oldid=1028112" இலிருந்து மீள்விக்கப்பட்டது