பக்கம்:ஆப்பிள் பசி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சிங்காரம்! உன் அன்பை இங்கே இவ்வளவு தூரம் வந்து தெரிவிச்சிருக்கணும் என்கிறதில்லை. ஒரு காலணு கார்டு போட்டிருந்தாலே போதுமே! அதையே நான் பெரிசா நி ைச்சிருப்பேன். நீ மேலுக்கு வந்தது, உனக்குப் புகழ் வந்தது எல்லாம் கேட்கிறப்போ சந்தோஷமா இருக்கு. நீ இன்னும் பிரமாதமா வரப் போறே பாரு! வாழ்க்கையிலே திறமை இருந்தா அதை யாரும் தடை போட முடியாது! இப்போ... இப்போ...'

பேச்சு பாதி யந்திரத்தனமாக வந்தது. அடிக்கடி சாமண்ணு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.

'இப்போ நீ ரொம்பக் களைச்சுப் போயிருப்பே ஓய்வு எடுத்துட்டு அப்புறமா வா. சாவகாசமாப் பேசலாம். நான் கொஞ்சம் வெளியிலே போக வேண்டியிருக்கு. ஆமாம்; நீ எங்கே தங்கி இருக்கேன்னு சொன்னே?”

'கோமள விலாஸ்’ என்ருன் சிங்காரப் பொட்டு. "ரைட் நம்பள வங்களுக்கு அதுதான் சரியான இடம்! ஒட்டல்காரர் பாலக்காடு ஐயர்தான். எனக்குத் தெரிஞ்சவர் தான். ஒட்டல் பில் பணத்தை நான் கொடுத்திடறேன். நீ ஒரு சல்லிக் காசு செலவழிக்கக் கூடாது...'

'உங்க பிரியம்...' 'நிறையப் போடாதே! நாகரிகமா நடந்துக்கணும்' என்று கண்சிமிட்டி வலது கட்டை விரலை வாய்க்கு நேராய்க் காட்டி ஞன் சாமண்ணு.

அந்த நேரத்தில் வாசலில், ஒரு ரோல்ஸ் ராய்ஸ் வந்து நிற்க, சாமண்ணு விரைந்து போய் காரின் பின் கதவைத் திறக்க, அதிலிருந்து பேரழகி சுபத்ரா முகர்ஜி சொகுசாக இறங்கி வந்தாள்.

நீற நிறத்தில் பஞரஸ் பட்டு உடுத்தியிருந்தாள். பவுன் களை அடிக்க, சந்திரன் முளைத்தது போல ஒரு தோற்றம்.

சிங்காரப் பொட்டுவின் கண்கள் சலனமற்று நின்றன. உள் மனசு பேசியது! அடேங்கப்பா ! என்ன அழகு? அசல் அப்சரஸ் மாதிரில்லே இருக்காங்க! இவங்க முன்னலே நம்ப ஜில்ஜில் ரமாமணி ஒரு தூசு மாதிரி! இவங்களை மட்டும் ஊருக்கு அழைச்சிக்கிட்டுப் போய் மேடைலே ஏத்திட்டா, அத்தனை பயகளும் சொக்கிப் போயிடுவானுக!'

சாமண்ணுவும் சுபத்ராவும் கைகோத்துப் படியில் ஏறி ஞர்கள்.

'மெதுவா நடங்க, மெதுவா' என்று சாமண்ணு சொல்லிக் கொண்டிருந்தான். இருவரும் அந்தரங்க அறைக்குள் சென்று மறையும் வரை சிங்காரப் பொட்டு காத்திருந்தான். கண் கொட்டாமல் அவர்களையே பார்த்து நின்ருன்.

185

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/178&oldid=1028167" இலிருந்து மீள்விக்கப்பட்டது