பக்கம்:ஆப்பிள் பசி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்டு நர்ஸிடம் சொல்லிக் கொண்டு வீடு திரும்பிய போது வழியில் கோமள விலாஸில் இறங்கிச் சிங்காரத்தின் அறைக் கதன்வைத் தட்டினர். - -

'என்னங்க! சாமண்ணுவுக்கு ஒண்னுமில்லையே!' என்று கேட்டான் சிங்காரம். - t

'ஒண்ணுமில்லை. ஆபரேஷன் உண்டா இல்லையான்னு சாயந்திரம்தான் சொல்வாங்களாம். இப்ப அதுக்குள்ள நான் உங்களைப் பார்க்க வந்தது ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேச லாம்னுதான்.' -

'சொல்லுங்க......' - 'ஊரிலே உங்க நாடகம் சக்கைப் போடு போடுதாமே?” 'உங்களுக்கு யார் சொன்னங்க?" "என் மகன் எழுதியிருந்தான்.” . 'அப்படீங்களா? அண்ணன் புண்ணியத்துலே எனக்கு நாட கத்துலேஹிரோவாசான்ஸ்கிடைச்சுது.நாலுபேர்மெச்சும்படிப் பேரும் கிடைச்சுட்டுது. அண்ணன்தான் எனக்கு வாழ்க்கை அமைச்சுத் தந்தவர். இப்படி ஆயிட்டுதேன்னு நினைக்கிறப்போ எனக்கு ரொம்ப துக்கமாயிருக்கு சேட்!'

'கவலைப்படாதீங்க. பெரிய பெரிய டாக்டரெல்லாம் வந்து பார்த்துக்கிட்டிருக்காங்க.. குதிரை ஏற வேணும்னு சொன் ளுேம். ஹண்டர்வாலி சினிமாவெல்லாம் பார்த்துட்டு அவங் களைப் போல இவரும் செய்யனும்னு நினைச்சார். சொன்னக் கேட்கல்லே. இன்னும் ரெண்டே ஷாட்தான் பாக்கி. அதுக் குள்ளே இப்படி ஆயிடுச்சு. டைரக்டர் வந்திருந்தாரே பாத்தீங் களா?' என்று கேட்டார் சேட்.

'நான் பார்க்கலையே!”

f y

“மரத்தடியிலேதான் நின்னுட்டிருந்தார். பாவம், அவருக்குத் தான் ஏகப்பட்ட கவலை! நீங்களும் நானும் பேசிட்டிருந்தோமா! உங்களைப் பற்றி என்கிட்டே விசாரிச்சாரு. சொன்னேன்! அவர் என்ன சொல்ருந்த, மீதி ஷாட்டுக்களை உங்களை வச்சே எடுத்துரலாமேங்கருர்' w -

Tjಶಿ நடிக்கச் சொல்றீங்களா?” ஆமாம்.' - - 'அடையாளம் தெரிஞ்சுடுமே?” "தெரியாது. உங்க முகத்தை க்ளோஸப்ல காட்டாமல் லாங் ஷாட்ல முடிச்சுடலாம். டயலாக் எதுவும் கிடையாது.”

திங்காரம் யோசித்தான். . .

ಸಹ! அண்ணன் இடத்திலே நான் நடிக்கலாமா?” 'அப்படிச்சொல்லாதீங்க. பெரிய் சான்ஸ் இது. விட்டுரு இங்க நீங்க செய்றது தப்பே இல்லை! அவர் ஒத்துப்பாரு! நீங்க இல்லாட்டி எப்படியும் வேறே ஆளைப் போட்டு எடுக்கிப் போருேம்.' -

I 92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/185&oldid=1028185" இலிருந்து மீள்விக்கப்பட்டது