பக்கம்:ஆப்பிள் பசி.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இங்கே இருக்க வேணும் சேட்ஜி! நான் உடனே புறப்பட றேன். என்னை ரயில் ஏற்றி விடுங்க!' என்ருன் அவன்.

"அப்படியா சொல்றீங்க? ஒரே ஒரு மாசம் இருங்க! உடம்பு தேறணுமில்ல? நாங்களும் உங்களைக் கவனமாப் பார்த்துப் போம்.' -

"இல்லே சேட் ஒரு நாள்தான்! ஒரே ஒரு நாள்தான் இருப்பேன். அதுகூட ஏன்னு சொல்லிடறேன். நான் இங்கே வந்தபோது பேலூர் மடம், கல்கத்தா காளி எல்லாம் காட் டறதாச் சொன்னிங்க. அப்போ எனக்கு அதிர்ஷ்டம் இல் லாமப் போச்சு! இப்போ பார்த்துடறேன். கண் கெட்ட பிறகு நமஸ்காரம் என்பாங்க! நான் கால் கெட்ட பிறகு பண்றேன். அடுத்த நாள் வண்டி! தயவு செய்து சேட்ஜி, எனக்கு இதை ஏற்பாடு பண்ணி வையுங்க.'

சிரிமண்ணுவின் ரணப்பட்ட நெஞ்சத்துக்குக் காளி கோயிலும் பேலூர் தரிசனமும் இதமாக இருந்தன.

மறுநாளே சென்னைக்கு ரயில் ஏறி விட்டான். ராமசாமி என்கிற துணையை சேட் ஏற்பாடு பண்ணியிருந்தார்.

கூடைகளாகப் பழங்கள் ஏறியிருந்தன. சேட்ஜியே அவனைத் தாங்கலாகத் தூக்கிச் சென்று உள்ள்ே எபீட்டில் உட்கார வைத்த பாங்கு அவன் மனத்தைத் தொட்டது.

சேட்ஜி எவ்வளவு பெரிய பணக்காரர்! நினைத்தால் பாதி கல்கத்தாவை சாயங்காலத்துக்குள் வாங்கிவிட முடியும்!

சிங்காரப்பொட்டு வந்திருந்தான். கண்ணிரோடு நின்று கொண்டிருந்தான்.

'விடுங்க, சேட்ஜி! நானும் ஊருக்குப் போயிடறேன். அண்ணனைக் கவனிக்க அங்கே ஆளு இல்லை. விடுங்க” என்ருன்.

'சிங்காரம் சொன்னக் கேளு! ஊருக்குப் போன எல்லா நேரமும் சாமு பக்கத்திலே இருப்பீங்க! அவ்வளவுதானே! அப்புறம் சாமுவுக்குச் சம்பாதிக்கிறது யாரு? அவரை ஆயுசு வரைக்கும் வைத்துக் காப்பாற்ற ஒரு வருவாய் வேண்டாம்? ஆண்டவன் புண்ணியத்திலே நீங்க இருக்கீங்க அதுக்கு! அண் ணனை அப்படி உள் அன்போடு நேசிக்கிறீங்க! ரெண்டு மூணு படம் பண்ணிக் கொடுங்க! சாமண்ணு உங்களுக்குச் செஞ்ச நன்றியை மறக்காம அவருக்குக் கடைசிவரை உபகாரியாய் இருங்க! என்ன நான் சொல்றது?' என்று சாமண்ணுவைப் பார்த்துத் திரும்பின்ை சேட்.

சாமண்ணு சன்னலோரம் அமர்ந்திருந்தான். கம்பியை விரலால் பிடித்திருந்தான். அவன் விழியில் ஒரு திவலே ஆடிற்று. அதன் முன் பிளாட்டாரமும், அதில் உள்ள யாவருமே

20.4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/197&oldid=1028214" இலிருந்து மீள்விக்கப்பட்டது