பக்கம்:ஆப்பிள் பசி.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ராமசாமி! பின் படுதாவைப் போடு' என்ருன் சாமண்ணு. படுதா விழுந்தது.

ஊரைப் பார்க்க சாமண்ணுவுக்கு விருப்பமில்லை. வண்டி வீட்டு வாசலில் போய் நின்றதும் மெதுவாக இறங்கினன். தெரு விளக்கு மஞ்சளாய்ச் சிணுங்கிக் கொண்டிருந்தது. யாரையுமே காணுேம்.

வீடு நிசப்தமாக இருந்தது. அவனை சோகத்துடன் அது பார்க்கும் பிரமை ஏற்பட்டது.

'டக் டக்'.

க்ரச்சின் ஒசை இப்போது அவன் காதிலேயே வித்தியாச மாகக் கேட்டது.

படிகளை அணுகினன்.

வராந்தாவில் படுத்திருந்த உருவம் மெள்ள எழுந்தது. தள்ளாடித் தூணைப் பிடித்தவாறு அவனை உற்று நோக்கியது.

'என்ன கந்தா! நான்தான் வந்திருக்கேன்! கதவைத் திற' என்ருன்.

கந்தப்பன் வாய் பொக்கையாக அவிழ, 'ஐயாவா, வரணும், வரணும்' என்று சொல்லி அவசரத் தடுமாற்றத்துடன் ஒடிக் கதவைத் திறந்தான். லாந்தர் ஏற்றியதும் வீடு பளிச்சிட்டது.

ஆவலுடன் ஒவ்வொரு அறையாகப் போய்ப் பார்த்தான். பழமை நினைவுகள் ஒவ்வொரு பகுதியிலும் ஒட்டியிருந்தன.

கடைசியாகக்கூடத்துக்குப்போனபோதுகந்தப்பன் அவனது க்ரச்சுகளைக் கவனித்துவிட்டான்.

'சாமி! இதென்ன!' என்று பதறிஞன். 'ஒண்னுமில்லை கந்தப்பா! கொஞ்ச நாள் ஆட வேண் டாம்னு கடவுள் சொல்லிட்டாரு! கட்டுப் போட்டிருக்கேன்! அவ்வளவுதான்' என்ருன் சாமண்ணு. - -

இரண்டு நாட்களுக்குப் பிறகு ராமசாமி சாமண்ணுவை ணுகி, 'அப்போ நான் புறப்படட்டுங்களா?' என்ருன்.

'சரி, நீ போயிட்டு வா. சேட் கிட்டே ரொம்ப விசாரிச்ச தாச் சொல்லு! இனி கந்தப்பன் என்னைக் கவனிச்சுக்குவான்' என்ருன் சாமண்ணு. -

மூன்று நாட்களாகியும் சாமண்ணு வந்திருப்பதை அந்த ஊரில் யாரும் கவனிக்கவில்லை. மனசில் அந்த எண்ணம் ஒரு பாறையாக அமிழ்ந்தது. 'எல்லோரும் என்னே மறந்துவிட்டார் さ巧金YTT "

கூடத்தில் எரிந்து கொண்டிருந்த லாந்தர் விளக்கு காற்றில் மெல்ல ஆடியது. -

'எவ்வளவு பெரிய வீடு இது! பரிவாரத்தோடு இதில் நிறைந்து வாழப் போகிருேம் என்று நினைத்தோமே! இப் போது அதன் விசாலமே அவனுக்கு வேதனையாக இருந்தது.

சட்டென்று ஒரு குரல்: 'மாமா!

210

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/203&oldid=1028225" இலிருந்து மீள்விக்கப்பட்டது