பக்கம்:ஆப்பிள் பசி.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஒரு மாசம் ஆச்சுப்புா.கோர்ட்டிலேர்ந்து வந்தார். நெஞ்சு வலிக்கிறதுன்னர். படுத்துண்டார், போயிட்டார்.'

'வக்கீல் மாமா போய்ட்டாரா?' அவன் புலம்பிஞன். சாமண்ணுவுக்குக்கண் இருண்டது.ஒருகணம் இரண்டாவது காலும் போய் அந்தரத்தில் மிதப்பது போல் தோன்றியது.

'மாமி! என்லை இந்த துக்கத்தைத் தாங்க முடியலையே! அவரைப் பார்க்க-முடியாமல் போகும்னு கல்கத்தாவே போயிருக்க மாட்டேனே! அவர் சிரிப்பும் சீகுர்ணமும், தலைப் பாகையும், மாமி இனி எந்த ஜன்மத்தில் பார்ப்பேன்?”

சாமண்ணுவிடமிருந்து அவை சத்திய வார்த்தைகளாக வந்தன. - - .

மாமியின் தழதழக்கும் தொண்டை மட்டும் சிறிது கேட்டது. விசித்தாள்.

மாமியின் தோற்றம் நினைவுக்கு வந்தது. தாமரை முகம். மூக்கில் பேசரியும் உதட்டில் புன்னகையும் சுடர் அடிக்கும். இன்னிக்கும் மாமி இருபத்தைந்து போல. இருப்பாள். அவளை இப்போது எப்படிப் பார்ப்பது?

'மாமி! என்னலே இந்ததுக்கத்தைத் தாங்கிக்க முடியலை மாமி! இப்படியா சோதனை பண்ணுவார் கடவுள்! எனக்கு நேர்ந்தது கூடப் பெரிசல்ல; உங்களுக்கு இப்படி ஒரு இடியா?” -

"உனக்கு என்ன ஆச்சு சாமு?' என்று மாமிதுயரத்துடன் கேட்டாள். - - - - -

'மாமி! சினிமா ஷூட்டிங்கில் குதிரை மேலேருந்து விழுந்து பெரிய ஆக்ஸிடெண்ட். காலை எடுத்துட்டாங்க.”

மாமி.கலங்கிப் போளுள். - - "சாமு!” தன்னை மீறி அவள் கூச்சல் போட்டு விட்டாள். "உனக்கா கால் இல்லை? உன் காலையாகடவுள் பறிச்சுட்டார்? என்னல தாங்க முடியவில்லையே சாமு! கடவுள் உன்னை இப்படிச் சீரழிச்சுட்டாரே!'

ழாமிக்குக் குமுறிக் குமுறி வந்தது. 'சாமு! நாளைக்கு நான் மல்லமங்கலம் போறேன். எங்க அம்மா ஊரு அது பந்துக்கள் இருக்கா! இனிமே இந்த ஊர்லே எனக்கு என்ன இருக்கு? உன்னிையும் பார்த்துப் பேசியாச்சு. அம்மாவோடு போய்க் கிராமத்திலேதான் இனிமே வாழ்க்கை! நீ வந்திருக்கேன்னு அந்த ஒட்டல்காரப் பெண் சொன்ன. அதிலேர்ந்து துடிச்சிண்டிருந்தேன். உன் கிட்டே ரெண்டு வார்த்தையாவது பேசிட்டுப் ப்ோகணும். ஊர் ஒத்துக்காது. மனுஷா ஒத்துக்க மாட்டா. இப்படி அவர் போய் ஆறு மாசத் துக்குள்ளே வெளியிலே கிள்ம்பிட்டாளேன்னு கைகொட்டிச் சிரிப்பா, ஆளுல் நான் தீர்மானிச்சுட்டேன்! என்ன ஆலுைம் உன்கிட்டே ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போறதுன்னு. பேசிட்டேன். நான் வரட்டுமா? யாரும் பார்க்கிறதுக்கு முந்தி 216

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/209&oldid=1028231" இலிருந்து மீள்விக்கப்பட்டது