பக்கம்:ஆப்பிள் பசி.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருட்டோட ஆத்துக்குப் போயிடறேன். வரட்டுமா சாமு? வர்ட்டுமா?’ என்று மனமில்லாமல் அங்கிருந்து புறப்ப்ட் டாள். -

'போய் வாங்க! உங்களை மறக்க மாட்டேன் மாமி! ஆயுசு முழுவதும் உங்க அன்பு என் மனசிலே பதிஞ்சு போயிருக் கும்.'

சாமண்ணு எழுந்து 'க்ரச் எடுத்து வாயிலுக்கு வருமுன் அவள் படி இறங்கி நடந்து கொண்டிருந்தாள்.

பின்புறமும் பக்கவாட்டும்தான் தெரிந்தன. ஒரு திடீர் இடி அவன் மீது விழுந்தது போலிருந்தது.

கோமளம் தலையை மழித்து வெள்ளைப் புடைவையால் மூடியிருந்தாள்.

அவள் உருவம் மெலிதாகத் தெருவில் இறங்கி விரைவாக மறைந்தது.

2 #7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/210&oldid=1028232" இலிருந்து மீள்விக்கப்பட்டது