பக்கம்:ஆப்பிள் பசி.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உனக்குச் சொந்தமல்ல, உன்னை ஏறெடுத்தும் பாராள் !'

ஊர்வலம் நகர நகர, பெரிய பெரிய நிழல்கள் சன்னல் வழியே உள்ளே விழுந்து பூதாகாரமாய் இயங்கின.

சிறிது நேரத்தில் தெருவில் எல்லாம் மறைந்து பழைய அமைதிக்கு வந்துவிட்டது. சந்திர ஒளியுடன் கூடிய அமைதி.

சாமண்ணு இதயத்தை அமுக்கிக் கொண்டு கட்டிலை நோக்கி நகர்ந்தான். கன்னம் முழுதும் நனைந்திருந்தது. காற்றின் அசைவுகளில் தூரத்திலிருந்து வந்த 'சக்கனி ராஜா' விட்டு விட்டுச் சிறிதும் பெரிதுமாய்க் கேட்டது. இரவு முழுதும் எதையோ பறி கொடுத்துவிட்ட சோகத்துடன் உறக்கமின்றிப் புழுங்கிக் கொண்டிருந்தான்.

பொழுது புலர்வதற்குள்ளாகவே கந்தப்பன் வந்து, 'ஐயா, கிளப்லேர்ந்து இட்லி காப்பி வாங்கி வந்திருக்கேன். சாப்பிட lங்களா? சுடச் சுட இருக்குது' என்ருன். சாமண்ணுவுக்கு எரிச்சலாக இருந்தது. தானும் தன் தனிமையும் அப்படியே ருக்க வேண்டும் போலிருந்தது! குறுக்கீடு பிடிக்கவில்லை. 'சூடு எல்லாமே காலம் கடந்து ஆறிப் போச்சு' என்று எண்ணிக் கொண்டான்.

மனதில் அந்த ஊர்வலமும், சகுந்தலாவின் குளிர் முகமும் மாப்பிள்ளை யாரென்று தெரியாத வேதனையும் சூழ்ந்து கொண் டிருந்தன. அந்தச் சிற்ப முகம், நெற்றிச் சரம், மாட்டல்....

உள்ளம் குமைந்து பழைய கணக்குகளைப் புரட்டிக் கொண் டிருந்தது. வாழ்வில் எங்கெங்கே சரியான வழியை விட்டு விலகிளுேம் என்பது புரிந்தது. புகழும் பணமும் கண்களை மறைத்துவிட்ட்து தெரிந்தது. பழைய வாழ்க்கை முன் ஜன்மம் போல் இருந்தது. இப்போது அதுதான் அவனுக்குச் சொந்தம் போலவும் தோன்றியது. *

சிங்காரப் பொட்டுவின் ஆறுதலான வார்த்தைகள் நினை வுக்குவந்தன.அதெல்லாம்.உணர்ச்சிவயத்தில் கூறியவார்த்தை கள்! இந்தக் காலத்தில் யாரையாவது யாராவது ஆயுசு வரை பாதுகாக்க முடியுமா?

'சாமண்ணு, இந்தத் தண்டனை உனக்கு வேண்டியதுதான். அழு, வாய் விட்டுக் கதறி அழு! அப்போதும் உன் துக்கம் தீராது. அப்போதே உன் அம்மா சொன்னுள். நினைவு இருக் கிறதா? பள்ளிக்கூடம் போடா, பள்ளிக்கூடம் போடான்னு அடிச்சிண்டாளே! கேட்டயா? ஊர் ஊராகத் திரிஞ்சியே, நாடகத்திலே சேர்ந்து எல்லாம் கிழிச்சுடப் போறேன்னு சொன்னியே, அம்மா உனக்கு முழு மனசா அதுக்கு அனுமதி தந்தாளா? -

பெரியவங்களுக்குத் தெரியாதா? கலை உலகம் எவ்வளவு மோசமான உலகம்னு நேத்திக்குப் பணக்காரன் இன்னிக்கு விலாசம் இல்லாமல் போயிடுவான். அவன் போகாவிட்டா

320

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/213&oldid=1028237" இலிருந்து மீள்விக்கப்பட்டது