பக்கம்:ஆப்பிள் பசி.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

நினைக்க நினைக்க மனசில் வேதனையும் ஆச்சரியமும் பெருகியது சாமண்ணுவுக்கு. - * 'தொடர்ச்சியாக எந்த பின்னமும் இல்லாமல் என் மீது உயிரை வைத்துள்ள பாப்பாவை உதாசீனப்படுத்தி விட்டேன். இது எவ்வளவு பெரிய தவறு?,

சில நாட்களே பழகிய சுபத்ரா என்னை அலட்சியப்படுத்து கிருள் என்று தெரிந்தபோது மனம் என்னமாய்த் துடித்தது? எத்தனை வேதனைப்பட்டேன்? அப்படித்தானே துடித்திருப் பாள்?" -

ஆதியிலிருந்தே அடிபிசகி விட்ட குற்றத்தை இப்போது உணர்ந்தான்."ஏதாவது ஒரிடத்தில் ஸ்திரமாக மனம் ஊன்றிப் பழகாமல் எட்டாத கணிக்கு ஆசைப்பட்டேனே' என்று வருந்தினன்.

'பாப்பா மீது அரும்பு சிநேகம் வைத்தேன். அதை வாட விட்டு விட்டேன். சகுந்தலா மீது மலர் சிநேகம் வைத்தேன். அது காய்க்காமலே போய் விட்டது. சுபத்ரா மீது கனி சிநேகம் வைத்தேன். அது கனியாமலே போய் விட்டது.

இதற்கெல்லாம் நானேதான் காரணம். ஒருவர் மீதும் நிலைக்காமல் மேலே மேலே மேலே போனதால் ஒருநாள் தடால் என்று பாதாளத்தில் விழவேண்டி வந்தது. - ராத்திரி சகுந்தலாவின் திருமண ஊர்வலம் போன போது ஏற்பட்ட மன எழுச்சி இன்னும் அடங்கவில்லை. அதன் வேதனை இன்னும் அடிமனத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அப்படி

  • 225
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/218&oldid=1028242" இலிருந்து மீள்விக்கப்பட்டது