பக்கம்:ஆப்பிள் பசி.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானல் எத்தனையோ தியாகங்கள் செய்து, எத்தனையோ முறை ஏமாற்றத்துக்குள்ளாகியும் விடாமல் தொடர்ந்து என்னையே எண்ணிக் கொண்டிருக்கும் பாப்பாவின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்! என்னுடைய அலட்சியம் எவ்வளவு வேதனை தந்திருக்கும்? * * * - ஒவ்வொரு கணமும் நரகத்தில் இருந்தது போல் உணாந ருப்பாள். சொல்லொணுத் துயரம் அடைந்திருப்பாள்.

"சரி; இப்போதாவது அவளைத் தேடிச் சென்று செய்த குற்றத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிடு' என்றது உள்மனம்.

'இப்போதா? வேறு கதி இல்லை என்றுதெரிந்ததும் அடையும் சரன்கதி இது என்பது பர்ப்பாவுக்குப் புரியாதா?”

'அப்படியானல் அவளை மறந்துவிடப் போகிருயா நீ? அவள்ைப் பார்க்கப் போவதே இல்லையா?”

“நிச்சயமா இல்லை.' 'மாமி கடுதாசியிலே எழுதியிருக்காளே! நாளை அந்தத் திருவிழா முடிஞ்சதும் பாப்பா உன்னைப் பார்க்க ஒடோடி வரப் போகிறேளே!'

'வரட்டும்!” ....-...س ." 'நீ எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. உன்னை அவள் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிருள். உன்னிடம் மாருத, அழியாது, அசைக்க முடியாத அன்பு வைத்திருக்கிருள். அந்தத் துர்ய்மையான, உண்மையான உள்ளத்தில் உன்னைத் தவிர வேறு யாருக்குமே இடமில்லை என்று கூறுவாளே, அப்போது நீ என்ன பதில் சொல்லப் போகிருய்?'

சாமண்ணு யோசித்தான். 'நாளை பாப்பா வந்தால் அவள் முகத்தில் எப்படி விழிப்பேன்? சகுந்தலையை அடியோடு மறந்து போயிருந்த துஷ்யந்தனைப் போல் அல்லவா நான் இத்தனை நாளும் பாப்பாவை மறந்திருந்தேன்! இப்போது அவள் முகத்தில் எப்படி விழிப்பேன்?

'அவள் நாளைக்கு இங்கே உன்னைத் தேடி வரத்தான் போகிருள். உன்னைப் பார்த்ததும் புதையலில் கிடைத்த பொக்கிஷம் மாதிரி மகிழப் போகிருள்!' .

சாமண்ணு நிமிர்ந்தான், 'கந்தப்பா!' என்று அழைத்தான். கந்தப்பன் ஒடி வந்தான். - - -

ಸ್ಥಿಶಿಕೆ மாசிலாமணி முதலியார் வந்தாருன்னு சொன் ou; !” "ஆமாங்க! நீங்க தூங்கிட்டிருந்தீங்க. அதேைல உங்களை எழுப்பு வேணும்.அப்புறம்வர்றேன்னு சொல்லிட்டுப்போயிட் டாரு. * r -

'ஊர்லேதான் இருக்காரா?” 'ஆமாங்க!' 'அவரை இப்ப அழைச்சுட்டு வர முடியுமா?” 'வரேங்க” ...

226

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/219&oldid=1028243" இலிருந்து மீள்விக்கப்பட்டது