பக்கம்:ஆப்பிள் பசி.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீரான குளிர் காற்று வண்டியை நோக்கி வீசியது. கணத் துக்குக் கணம் அதன் வேகமும் வாடையும் கூடியது.

"விறைக்குதுங்க!' என்று சொல்லிக் கொண்டே வண்டிக் காரன் ஒரு துண்டை இழுத்து உடம்பைச் சுற்றிக் கொண் Lss & .

'சொட சொட' என்று சத்தம். மழை வண்டிக் கூரையைத் தாக்கியது. வண்டிக்காரன் நடுங்கி ஓரமாக ஒடுங்கினன்.

புறப்பட்டபோது சாமண்ணுவுக்கு உடம்பு ஒரு மாதிரி இருந்தது. சரியாகச் சாப்பிட்டு இரண்டு நாள் ஆயிற்று. இப்போது அவனுக்கும் உடம்பு வெடவெடத்தது. தொடர்ந்து கன மழை பெய்தது. சாதாரணத் திவலைகள் அல்ல. ஒரு சமுத்திரம் சொரிந்தது. வண்டிக்குள் இம்மி பாக்கி இல்லாமல் அத்தனையும் நனைந்து தெப்பலாகிவிட்டது. சாமண்ணு வெட வெடத்தான். பெட்டியிலிருந்து மற்ருெரு போர்வையை எடுத் துப் போர்த்திக் கொண்டான். 'அம்மா, அம்மா’ என்று அரற்றி ஞன். பெட்டி மீது சாய்ந்து கொண்டான். சாதாரணக் கல் பாவிய பாதையாதலால் கடக் கடக் என்று சக்கரம் அரைக்க, கூண்டு பெரிதாக ஆடியது. இருபக்கமும் அடர்த்தியான மர வரிசைகள் பேய் போல வடிவம் காட்டின.

'வண்டிக்காரரே! இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?" என்று கேட்டான் சாமண்ணு.

'ஆறு கல்' என்ருன் வண்டிக்காரன். 4 & மைலா?' ஒரு நிலையாகப் படுக்க முடியவில்லை. மழை நின்றபாடில்லை. வண்டிக்காரன் 'தா! தா!' என்று குரல் கொடுத்து மாடுக. அதட்டிக் கொண்டிருந்தான்.

சாமண்ணுவுக்கு நெஞ்சு படபடக்க, ஜுரக் குளிர் வேகமாக அடிக்க, 'அம்மா! அம்மா!' என்ருன். கண்ணைத் திறக்க முடியவில்லை. * . - - - -

சட்டென்று வண்டி எங்கேயோ நின்றது. வண்டிக்காரன் எட்டிப் பார்த்தான். முதலில் அவனுக்கு எதுவும் தெரிய வில்லை. பிறகு எதிரில் நீர்த் தகடு தெரிந்தது. ஏதோ ஒரு ஒடை நிரம்பி ஓடுகிறது என்பதைப் புரிந்து கொண்டான்.

'ஐயா, ஐயா!' என்று சாமண்ணுவை எச்சரித்தான். உள்ளே பதில் இல்லை. -

வண்டிக்காரன் குதித்தான். மாடுகள் புத்திசாலித்தனமாக அவற்றின் தலைக்கயிறுகள் இரண்டையும் பற்றிக் கொண்டு முன்னல் தண்ணிருக்குள் மெதுவாக நடந்தவாறு போனன். வண்டியும் பின்னடி சென்றது. மறுபக்கம் மேடு ஏறினதும், ஐயா' என்று அழைத்தபோதும் சாமண்ணு பதில் கூருமல் படுத்துக் கிடந்தான். . . . .

232

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/225&oldid=1028248" இலிருந்து மீள்விக்கப்பட்டது