பக்கம்:ஆப்பிள் பசி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவன் கன்னத்திலே ஓங்கி அறைஞ்சுட்டேன். உடனே ‘லபோ லபோ’ ன்னு கத்தி ஊரைக் கூட்டினான். ஒருத்தரும் அவன் உதவிக்கு வரலே...”

“அப்புறம்?”

“அப்புறம் என்ன? போலீசுக்கு லஞ்சம் கொடுத்து என் மேல திருட்டுக் குற்றம் சாட்டி எனக்கு ஆறு மாசம் ஜெயில் தண்டனை வாங்கிக் கொடுத்தான்...”

“அடப்பாவி! திருட்டுக் குத்தமா? உங்க பேர்லயா?”

“ஆமாம். நான் வீட்டிலே இல்லாத சமயம் பார்த்து மாறு சாவி போட்டுக் கதவைத் திறந்து அவன் மகள் செயினைக் கொண்டு வந்து வச்சுட்டு என் மேலே சந்தேகப்படறதாப் போலீஸ்ல சொல்லியிருக்கான். போலீஸ்காரங்க வந்து சோதனை போடறப்போ பாத்ரூமில செயினும் அலமாரியில இரண்டு நூறு ரூபா நோட்டும் கிடைச்சுது....

‘இந்த ரூபா ஏது ? உன்னுதா’ன்னு கேட்டாங்க போலீஸ்ல. அது என் பணமில்லேன்னேன்.

“செயின் மட்டும்தானே காணாமப் போயிட்டதா கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கார். அப்படின்னா இந்த ரெண்டு நூறு ரூபாய் நோட்டும் இங்கே எப்படி வந்ததுன்னு கேட்டாங்க. எனக்குத் தெரியாதுன்னேன்...... பாப்பா ஏன் அழறே? நீயும் என்னைத் திருடன்னு நினைக்கறியா?”

“இல்லை, அந்த நோட்டு ரெண்டையும் உங்களுக்கு உதவியாயிருக்கட்டுமேன்னு நான்தான் புஸ்தகத்துலே மறைச்சு வச்சுட்டு வந்தேன், அதுவே உங்களுக்கு அபகாரமாயிட்டுதேன்னு நினைக்கிறப்ப ரொம்ப துக்கமாயிருக்கு...”

“ஓகோ, நீ வச்ச பணம்தானா அது! நான் செய்யாத குற்றத்துக்கு என்னை ஜெயில்லே போட்டு அவமானப்படுத்திட்டான். அந்த ஓட்டல்கார அயோக்கியன்! நான் மானத்தோடு வாழ்ந்து கிட்டிருந்தேன். என்னை அந்த ஊரார் முன்னே. தலை குனிய வெச்சுட்டான் இருக்கட்டும். அவனை நான் சும்மா விடப் போறதில்லை” என்று கறுவினான்.

“குற்றம் செய்யறதுதான் அவமானம். செய்யாத குற்றத் துக்கு ஜெயிலுக்குப் போறது அவமானம் இல்லே” என்றாள் பாப்பா.

“நான் ஜெயிலுக்குப் போனதைக்கூட பெரிசா நினைக்கலே. உன்னை அவன் தாசி மகள்னு ஏசினதை நினைக்கறப்பதான் உடம்பெல்லாம் பத்தி எரியுது. ஜெயில்லேருந்து நேத்துதான் வெளியே வந்தேன். நேரா நாடகக் கொட்டகைக்குப் போனேன். காண்ட்ராக்டரைப் பார்த்தேன். அவர் காப்பி வாங்கிக் கொடுத்துட்டு, ‘சாமண்ணா, உன்னை நான் மறுபடியும் நாடகத்துலே சேர்த்துக்க முடியாது. என் நிலைமை அப்படி

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/33&oldid=1029142" இலிருந்து மீள்விக்கப்பட்டது