பக்கம்:ஆப்பிள் பசி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“அப்படின்னா அந்தக் குழந்தையைப் பற்றின கவலை உங்களுக்கு இல்லையா?”

“இருக்கு. ஆனாலும் என்ன செய்ய முடியும்?”

“அப்ப அதன் எதிர்காலம்?”

“அதை நீதான் முடிவு செய்யணும்!”

அபரஞ்சிக்குத் தலை சுற்றியது, மயங்கிக். கீழே விழப்போனவளை அப்படியே தாங்கிப் பிடித்துக் கொண்டார் ஐயர். நாகரத்னம் ஓடி வந்து, “ஐயோ, என் அப்ரஞ்சிக்கு என்ன ஆச்சு?” என்று பதறியபடி தண்ணீரை முகத்தில் தெளித்தாள். அபரஞ்சி மயக்கம் தெளிந்து எழுந்ததும் ஐயர் அவளிடம், “நீ கொஞ்சம் படுத்துத் தூங்கு. நான் அப்புறம் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து போனார். அவர் வெளியே போனதும் அபரஞ்சி தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.

புனிதமான உணர்வுகளோடு ஒருத்தருக்கு சமூக அந்தஸ்து தரும் தகுதி எனக்கு இல்லையா?

என் வயிற்றில் வளரும் இந்தச் சிசு உலகத்தைப் பார்க்கும் போது அதுக்குக் கிடைக்கக் கூடிய பட்டம்:

‘தேவடியா பெத்த குழந்தை!’

நான் இதை வளர்க்கக் கூடாது... அவரும் இதை வளர்க்கப் போறதில்லை. ஒரு வேளை எனக்குப் பிறக்கப் போகிற, குழந்தை பெண் குழந்தையாப் பிறந்துட்டா? பிற்காலத்தில சமூகம் என் மகளை ஏற்றுக் கொள்ளுமா? ஐயோ, அதை நினைக்கவே பயமாயிருக்கு. வேற யார் கிட்டேயாவது கொடுத்து வளர்க்கச் சொல்ல வேண்டியதுதான். யார்கிட்ட, யார்கிட்ட?

குமாரசாமி கண்முன் தோன்றிப் பளிச்சென்று மறைய, “அம்மா குமாரசாமியைக் கொஞ்சம் கூப்பிட்டு வரச் சொல்றயா? நான் அவரோடு நிறையப் பேசணும்”

ஒரு வெள்ளிக்கிழமை, விளக்கு வைக்கும் நேரத்தில்...... பாப்பா பிறந்தாள்...


னக்கு எப்ப கல்யாணமாச்சுன்னு என்கிட்டே சொல்லவேயில்லையே!”

“நான் உங்களைச் சந்திச்ச ஒரு மாசத்துக்கெல்லாம் ஆயிட்டுது. இப்பத்தானே உங்களைப் பாக்கறேன்.”

“நான் ஜெயிலுக்குப் போனப்புறமா? அப்படின்னா உன் புருஷன் இப்ப எங்க இருக்கான்?”

“நீங்க இருக்கிற அதே ஊர்லதான். என்னை அவர் தள்ளி வச்சதுக்காகக் கூட நான் வருத்தப்படலை. ஆனா தாசி மகள்னு சொல்லி விரட்டியதைத்தான் பொறுத்துக்க முடியலை. நான் ஒழுங்கா, கெளரவமா, குடும்பப் பெண்ணா வாழ்ந்துகிட்டிருக்-.

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/41&oldid=1029192" இலிருந்து மீள்விக்கப்பட்டது