பக்கம்:ஆப்பிள் பசி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 லையில் ஜரிகைத் தலைப்பாகையுடன் முனகாலா ராமா நாயுடு மிடுக்குடன் காணப்பட்டார். புஷ்டியான அடர்த்தி மீசை அவர் முகத்துக்கு கம்பீரம் தந்தது.

வெட்கமும் வேதனையும் உடம்பெல்லாம் பிடுங்கித் தின்ன, சாமண்ணா அவர் எதிரில் ஒரு துரும்பாக நின்றான்.

“என்னப்பா சொல்லு! நீ குடியிருந்த மாடியிலதான் கொலை நடந்திருக்கு. ஒட்டல்காரர் மண்டையில உருட்டுக் கட்டையால அடிச்சிருக்காங்க. உனக்கும் அந்த ஒட்டல்காரருக்கும் ஒரு நாள் பெரிய ‘ரப்சர்’ நடந்திருக்காம். அன்னைக்கு அந்த ஒட்டல்காரரை நீ ஆவேசமா சட்டையைப் பிடிச்சு இழுத்து நடுரோட்ல கொண்டு போய் மல்லாத்தி, ‘உன்னைச் சும்மா விடறன பாரு’ன்னு மண்ணை வாரி இறைச்சயாம். இப்ப எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்கறே. கொலை நடந்தப்ப ஊர்லயே இல்லேன்னு சாதிக்கிற. இதையெல்லாம் என்னை நம்பச் சொல்றயா?”

இன்ஸ்பெக்டர் தலைக்கு மேல் பிரேமுக்குள்ளிருந்து ஐந்தாம் ஜார்ஜ் சக்ரவர்த்தி நீலக் கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தார்

சற்று எட்டத்து அறையில் அடைபட்ட கைதி ஒருவன் கம்பிக் கதவைப் பிடித்தவாறு நின்றன்.

ஸ்டாண்டில் நான்கு துப்பாக்கிகள் குத்திட்டு நின்று கொண்டிருந்தன.

“நான் அன்னைக்கு சத்தியமா ஊர்ல இல்லே சார்! அதுக்கு ஆதாரம் இருக்குங்க” என்றான் சாமண்ணா.

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/51&oldid=1029329" இலிருந்து மீள்விக்கப்பட்டது