பக்கம்:ஆப்பிள் பசி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏதோ விஷயம் இருக்குன்னு வச்சுக்குங்க...”

“அப்படியா? அவள் ஜாமீன் மட்டும் வேணுமாக்கும்? அது பரவாயில்லையோ?”

“நானா அவளை ஜாமீன் கேட்டேன்? அவளாவேதான் எனக்குத் தெரியாம இதைச் செஞ்சிருக்கா. முன்னாடியே இது தெரிஞ்சிருந்தா நான் அனுமதிச்சிருக்கவே மாட்டேன்.”

“அவள் இல்லேன்னா வேறே யாரு உன்னை வெளியிலே கொண்டு வந்திருக்கப் போறா? ஜெயில்ல கிடந்து திண்டாடியிருப்பே. அதுக்காக நீ அவளுக்கு நன்றி சொல்லணும். அதை விட்டுட்டு யார் செய்யச் சொன்னா, எவா செய்யச் சொன்னான்னு கேட்கிறியே, இது 2.னக்கே நியாயமாயிருக்கா?” என்று சிறிது காரமாகவே பேசிய கோமளம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

“யாரும் செய்திருக்க மாட்டாங்கறது நன்னாத் தெரியும். நன்றியோட இருக்கணுங்கறதும் தெரியும். நீங்க வருத்தப்படாதீங்க. என்னைப் பத்தித் தப்பா நினைச்சுக்காதீங்க. என் மேலேகோபப்படாதீங்க. இந்தவிஷயத்துலே நான் நினைக்கிறது வேறே. அதையெல்லாம் உடைச்சுப் பேச இது சந்தர்ப்பம் இல்லை. பின்னாலே நானே சொல்றேன் உங்களுக்கு” என்றான்.

“என்னவோ, அந்தப் பெண் உன் மேல வெச்சிருக்கிற பிரியத்தை நீ புரிஞ்சுண்டா சரி.”

“பிரியமாத்தான் இருக்கா, ஒத்துக்கறேன். ஆனா அதுக்கு மேலே போயிடக் கூடாதேன்னுதான் கவலைப்படறேன். உங்களுக்குத் தெரியாததில்லை. நான் பிராமணக் குடும்பத்துல பிறந்தவன். எங்கப்பா சாமவேதம் படிச்சவர். கௌரவமா வாழ்ந்தவர். அவர் வயத்துலே பிறந்த நான் எங்க குடும்ப கௌரவத்தைக் காப்பாத்தணும் இல்லையா? சாதாரண நிலையிலேருந்து ஏதோ கொஞ்சம் முன்னேறி என் வயத்தைக் காப்பாத்திக்கிற நிலைக்கு வந்திருக்கேன். ஒரு சமயம் நினைச்சா, அது கூட வந்தாச்சான்னு சந்தேகமா இருக்கு!”

“அதெல்லாம் வந்தாச்சு. அசம்பாவிதமா இந்தக் கொலைக் கேஸ் குறுக்கிட்டு உன்னை நிம்மதியில்லாமப் பண்ணிடுத்து. இல்லைன்னா இத்தனை நேரம் நீ ஜாம் ஜாம்னு நாடகத்திலே ராஜாவாட்டம் நடிச்சிண்டிருப்பியே!

“அதுக்குத்தான் நானும் ஆசைப்படறேன். ராஜா ஆகாட்டாலும் ராஜா மாதிரி நடிக்கிறதுக்காவது 'சான்ஸ்' கிடைக்காதான்னு ஏங்கிண்டு இருக்கேன்.”

“நிச்சயமாக் கிடைக்கும்; கவலைப்படாதே!”

“கிடைக்கணும்! உங்க ஆசீர்வாதம். அப்புறம் பாருங்கோ, எனக்குச் சின்ன வயசிலே பெரிசு பெரிசா கனவு கண்டே வழக்கமாயிடுத்து. நான் ஓகோன்னு வரணும்! ஆமாம்! சாதாரணமா செலவுக்குக் கிடைச்சது வரவு என்கிற மாதிரி இல்லா

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/69&oldid=1029582" இலிருந்து மீள்விக்கப்பட்டது