பக்கம்:ஆப்பிள் பசி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-மல் அமோகமா வாழணும். எங்க தாத்தா அப்படி வாழ்ந்தாராம். அம்மா சொல்லிச் சொல்லி ஆச்சரியப்படுவர். அந்த அமோகத்தை நானும் எட்டணும். அதுக்குக் கடவுள் அனுக்கிரகம் இருக்கணும்.”

“'நடக்கும்! நடக்கும்! ஏன் நடக்காது?”

“இருந்தாலும் மனித யத்தனம்னு ஒண்ணு இருக்கோல்லியோ! நான் இப்ப அந்த யத்தனத்திலே இருக்கேன் எத்தனை நாள், எத்தனை காலம் யத்தனம் பண்ணணுமோ, அதுவரைக்கும், அந்த லட்சியத்தை அடையற வரைக்கும், நான் என் சொந்த சுகத்தில், சொந்த வசதியில் ஆழ்ந்துடக் கூடாதுன்னு கங்கணம் கட்டிண்டிருக்கேன்.”

கோமளம் சற்றே வியப்பாக நிமிர்ந்து உட்கார்ந்தாள், அவள் குரலில் ஒரு வைராக்கியம் தொனித்தது.

“மாமி! சாமண்ணாவுக்கு ஆசை, பாசம், நேசம், இதயம் இதெல்லாம் எதுவும் இல்லைன்னு நினைச்சுடாதீங்கோ! எல்லாமே இருக்கு! நிறையவே இருக்கு! நான் நடிகனாச்சே! இல்லாத உணர்ச்சியை எல்லாம் கூட இருக்கும்படி காட்டணுமே! ஆனா மாமி இந்த உணர்ச்சி எல்லாத்தையும் நான் மறக்கடிச்சுட்டு புழுவா வாழ்ந்திருண்டிருக்கேன். என் மேலே அனுதாபப்பட்டு யாராவது உதவி செய்ய முன்வந்தால் அவாளையும் என் துரதிர்ஷ்டம் துரத்தும். அப்படி ஒரு ராசி. எனக்கு! என்ன ஆனாலும் சரின்னு நான் ஒரு வெறியோடு, லட்சியத்தை நோக்கிப் புறப்பட்டிருக்கேன். எங்கே போய் நிற்பேனோ எனக்கே தெரியாது. நான் திடமாச்செயல்படணும், அப்பப்போ சோதனை வரும். அதுக்கெல்லாம் ஈடுகொடுத்து நிமிர்ந்து நிற்கணும். உள் மனம் அப்பப்போ என்னைச் சுண்டி விட்டுக் கொண்டே இருக்கு. ‘டேய் சாமண்ணா, எச்சரிக்கையா இருடா.. இப்போ கிடைக்கிற களாக்காய் மேலே கண் வைக்காதேடா. அப்புறம் பலாக்காய் கிடைக்காமல் போயிடும்’னு. அதனால்தான் இந்த ஆசையையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டேன் மாமி!” என்றான்.

கோமளத்திற்கு அவன் பேச்சு வியப்பைத் தந்தாலும் அதனூடே மனம் உடைந்து போன ஒரு நடிகனின் லட்சியக் குரல் கணீர் என்று ஒலித்தது.

“அப்படின்னா இப்ப என்ன செய்யப் போறே? அந்தப். பெண் உதவியே வேண்டாம் என்கிறாயா?”

“செய்த உதவி வரைக்கும் சரி.. அதுக்காக அவளுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன். ஆனால் அது என் மனசிலே ஒரு பாசத்தை வளர்த்து எங்கள் உறவைப் பலப்படுத்திடக் கூடாதேன்னுதான் பயப்படறேன்.”

“அதென்ன மர்மமோ? அதென்ன பயமோ! கேட்டாலும் சமயம் வரப்போ சொல்றேங்கறே? அப்படின்னா உனக்கு யார்

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/70&oldid=1029584" இலிருந்து மீள்விக்கப்பட்டது