பக்கம்:ஆப்பிள் பசி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒண்ணுமே சொல்லலையே! நீ இங்கே வந்திருப்பாய். உன்னைப் பார்த்துப் பேசிவிட்டும் போகலாம்னுதான் அவசரம் அவசரமாகத் தூங்காமக் கூட ஓடி வந்தேன்.”

“என் அபிப்ராயம் உங்களுக்கு அவ்வளவு முக்கியமா என்ன? பெரிய இடத்து ரசிகர்களெல்லாம் உங்களைப் பாராட்டிக் கை குலுக்கறப்போ என் பாராட்டுதானா முக்கியம்?”

“சபையிலே பின் வரிசையிலே நீ உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். என் கவனமெல்லாம் உன் மீதேதான் இருந்தது. ஆனா நாடகம் முடிஞ்சு திரும்பிப் போறப்பதான் பார்க்க முடியாமப் போயிட்டுது.”

“ஆமாம், முக்கியமாப் பேசறவாகிட்ட பேசி முடிச்சுட்டுத்தானே மத்தவங்களைப் பார்க்க முடியும்?”

எங்கேயோ வலித்தது சாமண்ணாவுக்கு.

“எனக்கு எல்லார் தயவும் வேண்டும். யாரை விட முடியறது?” என்றான் அவன்.

“உண்மைதான். பாதி ஹீரோ வேஷம் போட்டாச்சு! முழு ஹீரோ ஆயிட வேண்டியதுதானே இனி பாக்கி!”

“ஆமாம்; பெரிய்ய ஹீரோ... உடுத்திக்கிறதுக்கு நல்லதா ஒரு வேட்டி கிடையாது. ஹீரோவாம் ஹீரோ!”

பாப்பா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் குரலில் தோய்ந்திருந்த வருத்தம் அவளை உலுக்கியது.

சற்று மெலிந்து போயிருந்த சாமண்ணா கசங்கிப் போன சட்டையும் அழுக்கு வேட்டியுமாக வந்திருந்தான்.

முகம் சிறிது ஏழ்மை காட்டியது. கழுத்துக்குக் கீழ் வெறுமையாக வெறிச்சோடிக் கிடந்தது. நேற்று அர்ச்சன வேடத்தில் பார்த்த ராஜ கம்பீர சாமண்ணா எங்கே? இந்தக் குசேல வறுமையில் வாடும் சாமண்ணா எங்கே?

வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். குமாரசாமியும் வக்கீலும் வந்து கொண்டிருந்தனர்.

'“சாமண்ணாவை நேத்து பார்க்கலியே நீங்க?” என்று குமாரசாமியிடம் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் வக்கீல்.

“இல்லைங்க. நான்தான் அந்த விவகாரமாப் போயிட்டேனே!” என்றான் குமாரசாமி. அந்த விவகாரம் என்ன என்பது வக்கீலுக்குத் தெரியும்.

“இதோ வந்துடறேன் சாமண்ணா! அஞ்சே நிமிஷம். இவரோடு ஒரு முக்கிய விஷயம் பேசணும்” என்று சொல்லித் தமது ஆபீஸ் அறைக்குள் குமாரசாமியை அழைத்துச் சென்றார். கதவைச் சாத்திக் கொண்டார். தஸ்தாவேஜுகளை எடுத்து குமாரசாமியோடு, அந்தரங்கமாகப் பேசத் தொடங்கினார். “அந்தப் பையனிடமிருந்து விடுதலைப் பத்திரம் வாங்கிடலாம். அவனே அதுக்குத் தயாரா இருக்கானே! அதனால்

91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/90&oldid=1029673" இலிருந்து மீள்விக்கப்பட்டது