பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 89

'சொல் நல்லவை நாணாமல்

தந்து முழவின் வருவாய் வாய்வாளா? -பரிபாடல்

வாயின் உறுப்புகளும் சொல்லும்,

சொல்லுக்குத் தாயான வாய் தான்மட்டும் சொல்லுக்காக நிற்பது மட்டுமன்றித் தன் குழந்தைகளையும் சொல்லுக்காக நிற்க வைத்துள்ளது. வாய் என்னும் தாயின் சேய்கள் நா. பல், உதடு, அண்ணம் முதலியன.

வாய் என்பது உறுப்பாயினும் அது தனித்து விளங்கும் ஒன்று அன்று. பல உறுப்புக்களின் தொகுப்பையே வாய் என்கின்றோம். நா, பற்கள், இதழ் அண்ணம் என்னும் மேல்வாய் முதலியவற்றின் தொகுப்பே வாய். இவ்வுறுப்புக்களே எழுத்துக்களை-சொற்களை உருவாக்குவன என முன்னரே கண்டோம். சொல்லைக் குறிக்க வாய்' என்னும் சொல் அமைகின்றமை போன்றே வாபின் உறுப்புக்களும் ஆகுபெயராய்ச் சொல்லைக் குறிக்கப் பயன்படு கின்றன.

'யா காவார் ஆயினும் நா காச்க' என்னும் குறளடியில் 'நா காக்க' என்பதற்குத் தீயசொல்லைச் சொல்லாமல் நீக்குக' என்பது பொருள். இங்கு 'நா சொல்லுக்காக நிற் கின்றது. .

'நாவினால் சுட்ட வடு'

"நா நலம். என்னும் நலனுடைமை' என்பனவற்றிலும்

'சொல்' என்னும் பொருளையே நா தருகின்றது.

'பல் போனால் சொல் போச்சு’’ என்பது நாட்டு வழக்கு, இவ்வழக்கில் சொல்லுக்குப் பல் உடலாய் நிற்பதைக் காண் கின்றோம். மேலும் சொல்லை ஒலித்துக் காட்டுவதற்குக்

24. பரி. - 20 - 74, 75

55. குறள் - 127 26. 3 * * 139

2 7 《数 密感及